ஆர்கே நகரில் தினகரனின் 'ஜரூர் பணப்பட்டுவாடா'- தலைமை தேர்தல் ஆணையரிடம் ஓபிஎஸ் அணி நேரில் புகார்
டெல்லியில் தேர்தல் தலைமை ஆணையரை ஓபிஎஸ் அணியினர் நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர்.
டெல்லி: டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையரை ஓபிஎஸ் அணியினர் இன்று திடீரென சந்தித்தனர். அப்போது ஆர்கே.நகரில் டிடிவி.தினகரனின் ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு பணப்படுவாடா செய்வதாக அவர்கள் புகார் அளித்தனர்.
ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா கட்சி சார்பில் டிடிவி.தினகரன் போட்டியிடுகிறார். தினகரனும் அவரது ஆதரவாளர்களும் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு வாக்குக்கு பணம் வழங்குவதாக ஆர்கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்துக் கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் அதிமுக புரட்சி தலைவி அம்மா கட்சியை சேர்ந்த ஓபிஎஸ் அணியின் மைத்ரேயன்,கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இன்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்தனர். அப்போது டிடிவி. தினகரனின் ஆதரவாளர்கள் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள ஆர்கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு சரமாரியாக பணம் பட்டுவாடா செய்வதாக அவர்கள் புகார் மனு அளித்தனர்.
இதனை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஏற்கனவே ஓபிஎஸ் தரப்பு அளித்த புகாரால் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தேர்தல் ஆணையரை சந்தித்து அவர்கள் நேரில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications