வாரணாசித் தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்துப் போட்டியிடும் 'பீகார் பின்லேடன்'!
பாட்னா: பீகாரின் பின்லேடன் என்று அழைக்கப்படும் மேராஜ் காலித் நூர் என்பவர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிடுகிறார்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அங்கு ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். இப்போது மோடிக்கு எதிராக இன்னொரு போட்டியாளரும் களமிறங்க உள்ளார். அவர் தான் ஒசாமா பின்லேடன்.

மிரண்டு விடாதீர்கள். பாட்னாவைச் சேர்ந்த மேராஜ், பார்ப்பதற்கு பின்லேடன் போலவே இருக்கிறார். இதனால் இவரை பீகார் பின்லேடன் என்றே அழைக்கிறார்கள். மேராஜ் போட்டியால் மோடிக்கு எதிரான பிரசாரத்தில் மேலும் ஒரு சூடு கூடியுள்ளது.
அசப்பில் ஒசாமாவே தான்...
அல்கொய்தாவின் மறைந்த தலைவர் ஒசாமா பின்லேடனைப் போலவே .தாடி வளர்த்திருப்பதுடன், உடையும் அணிந்து காட்சியளிக்கிறார் மேராஜ்.
மதவாத சக்திகளை ஒழிக்க...
மதவாத சக்திகளை ஒழிக்கவே தான் மோடியை எதிர்த்துப் போட்டியிடுவதாக கூறுகிறார் மேராஜ்.
ஒசாமா ரூபத்தில் பிரசாரம்...
ஏற்கனவே இவர் ராம் விலாஸ் பாஸ்வான் கட்சிக்காக ஒசாமா பின்லேடன் தோற்றத்தில் பிரசாரம் செய்து பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார்.
ராம் இந்தியா...
இப்போது இவர் ராம் இந்தியா என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். மத நல்லிணக்கத்துக்காக தான் பாடுபடுவதாகவும் கூறி வருகிறார்.
சுயநலவாதிகள்...
பாஸ்வான் குறித்து இவர் கூறுகையில், என்னை தங்களது சுய நலத்துக்காகவே பலரும் பயன்புத்தியுள்ளனர். பாஸ்வானும் அதில் ஒருவர்.
வாரணாசியில் போட்டி
ஏப்ரல் 23ம் தேதி நான் வாரணாசியில் மோடிக்கு எதிராக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்யவுள்ளேன் என்றார் மேராஜ்.
தொழிலிதிபர்
தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் மேராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லீம் இளைஞர்களே திரண்டு வாருங்கள்...
தான் வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்யப் போகும்போது முஸ்லீம் இளைஞர்கள் தன்னுடன்திரண்டு வர வேண்டும் என்றும் மேராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications