சானியா மிர்சாவை நேரில் வாழ்த்திய ஏ ஆர் ரஹ்மான்!
டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ள சானியா மிர்சாவுக்கு நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான்.
டென்னிஸ் உலகில் தொடர் வெற்றிகளைக் குவித்து வருகிறது சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி.

அமெரிக்காவின் சார்லஸ்டன் நகரில் நடைபெற்ற டபுள்யூ.டி.ஏ. ஃபேமிலி சர்க்கிள் கோப்பை டென்னிஸ் போட்டியில் சமீபத்தில் இந்த ஜோடி சாம்பியன்ஷிப் பட்டம் வென்றது. இதையடுத்து, சர்வதேச மகளிர் இரட்டையர் தரவரிசையில் சானியா முதல் இடத்துக்கு முன்னேறினார்.
இந்திய வீராங்கனை ஒருவர் தரவரிசையில் முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறை என்பதால் சானியாவுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகவுள்ள ஓ கே கண்மணி படத்தின் தெலுங்கு பதிப்பு அறிமுக விழாவில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் நகருக்கு வந்திருந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், சானியா மிர்சாவின் வீட்டிற்கு நேரில் சென்றார். டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த இந்தியாவின் முதல் வீராங்கனை என்ற அரிய சாதனை படைத்ததற்காக சானியாவைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
மிகவும் மகிழ்ச்சியடைந்த சானியா, ரஹ்மானின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்தார். இதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் சானியா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications