Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குகேஷ் தெலுங்கு பையன் தான்.. நாயுடுவை தொடர்ந்து பெருமையாக சொன்ன பவன் கல்யாண்.. கவனிச்சீங்களா

Subscribe to Oneindia Tamil

அமராவதி: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள தமிழகத்தை சேர்ந்த குகேஷ் தெலுங்கு பையன். தெலுங்கு குடும்பத்தை சேர்ந்த அவருக்கு வாழ்த்துகள் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூறியுள்ளார். ஏற்கனவே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, குகேஷை தெலுங்கு பையன் என்று அடையாளப்படுத்தியதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் பவன் கல்யாண் இப்படி செய்துள்ளார்.

சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் டிங் லிரென் மற்றும் தமிழகத்தை சேர்ந்த குகேஷ் ஆகியோர் மோதினர். இதில் டிங் லிரெனை வீழ்த்தி தமிழகத்தை சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்றார்.

gukesh pawan kalyan world chess championship

இதன்மூலம் குகேஷ் தனது 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். இதனை அனைவரும் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக நம் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் பலரும் தங்களின் வலைதள பக்கங்களில் குகேஷுக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே தான் குகேஷ் தமிழரா அல்லது தெலுங்கரா என்கிற சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தான். அதில், "நமது சொந்த தெலுங்கு பையன் குகேஷுக்கு வாழ்த்துக்கள். 18 வயதில் உலகின் செஸ் சாம்பியனாக சிங்கப்பூரில் வரலாற்றை மாற்றி எழுதியுள்ளார். குகேஷ், உங்கள் அசாத்திய சாதனையை ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடுகிறது. வரும் தசாப்தங்களில் நீங்கள் இன்னும் பல வெற்றிகளையும் பாராட்டுகளையும் பெற வாழ்த்துகிறேன்!" என்று பாராட்டியிருந்தார்.

இதனால் தான் சர்ச்சை உருவானது. இதுதொடர்பாக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவிக்க தொடங்கினர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் குகேஷ் தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர் என்று கூறினர். திமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர் அவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்று பதிலடி கொடுத்தனர். மேலும் பாஜகவினர் சிலரோ அவரை தமிழர், தெலுங்கர் என்று பாராமல் இந்தியர் என்று பார்க்க வேண்டும் என்று பார்க்க வேண்டும் என்று கூறினர்.

இந்நிலையில் தான் குகேஷுக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குகேஷ் தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர். அவர் தெலுங்கு பையன் என்று அடையாளப்படுத்தி உள்ளார். இதுதொடர்பாக பவன் கல்யாண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற குகேஷ் தொம்மராஜுவுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள். இளம்வயதிலேயே உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது இந்தியார்கள் அனைவருக்கமான பெருமையாக இருக்கிறது. அவரது வெற்றி செஸ் விளையாட்டில் ஆர்வம் காட்டி வருவோருக்கும், அவர் பின்பற்றி வரும் விஸ்வநாதன் ஆனந்துக்கும் பெரும் மகிழ்ச்சியை அளிக்கும்.

விஸ்வநாதன் ஆனந்தை ஊக்கமாக எடுத்து கொண்டு தெலுங்கு பேசும் மாநிலத்தில் இருந்து உலக அரங்கில் கோனேரு ஹம்பி, பி ஹரிகிருஷ்ணா, துரோணவள்ளி ஹரிகா, வர்ஷினி மற்றும் அர்ஜுன் ஆகியோர் சாதித்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று சாதித்துள்ளனர். குகேஷின் இந்த சாதனை என்பது நிச்சயம் அடுத்த தலைமுறையை ஊக்கப்படுத்தும்.

உண்மை என்னவென்றால் தமிழ்நாட்டில் இருக்கும் தெலுங்கு குடும்பத்தை சேர்ந்த குகேஷ் இந்த சாதனையை செய்திருப்பது தெலுங்கு சமுதாய மக்களுக்கு ஸ்பெஷலான விஷயமாகும். எதிர்காலத்தில் அவர் இன்னும் சாதிக்க என்னுடைய வாழ்த்துகள்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவர் குகேஷ் என்று பவன் கல்யாண் கூறியுள்ளார். அதோடு அந்த அறிக்கை வெளியிட்டுள்ள எக்ஸ் பக்கத்தில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற குகேஷ் நம்முடைய தெலுங்கு பையனுக்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+