Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2014-ம் ஆண்டே தடை செய்யப்பட்ட "எலி வளை" நடைமுறை.. உத்தரகாண்டில் கை கொடுத்தது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டேராடூன்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் கடந்த 2014 ஆம் ஆண்டிலேயே தடை செய்யப்பட்ட எலி வளை நடைமுறை உத்தரகாண்ட் மீட்பு பணியில் தொழிலாளர்களை மீட்கும் பணிக்கு பெரும் பங்காற்றியுள்ளது. இது பற்றிய விவரத்தை இங்கே விரிவாக பார்க்கலாம்.

உத்தரகாண்டில் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 41 பேரையும் மீட்கும் பணியில் பெரும் பங்காற்றினர் எலி வளை தொழிலாளர்கள் எனப்படும் சுரங்க தொழிலில் கை தேர்ந்த ஊழியர்கள். இயந்திர கோளாறு ஏற்பட்ட பிறகு சுரங்கத்திற்குள் கைகளால் சுரங்கம் தோண்டி உள்ளே சென்று மீட்பு பணிகளை "எலிவளை தொழிலாளர்கள்" செய்துள்ளனர். குழாய்களை அமைத்து உள்ளே சென்று மீட்பு பணிகளை செய்துள்ளனர்.

Outlawed Rat - Hole Mining technique plays a Major role in the Uttarakhand tunnel Rescue work

இவை அனைத்தும் கைகள் மூலமே செய்துள்ளனர். எலி வளை என்று சொல்லப்படும் இந்த பணிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த 2014 ஆம் ஆண்டு தடை விதித்தது. இது அறிவியல் பூர்வமானது அல்ல எனக் கூறி தடை செய்தது. இந்த முறையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. எலி வளை முறை பொதுவாக நிலக்கரி எடுக்க செய்யும் முறை ஆகும். அதாவது சுரங்கம் உள்ளே கைகளால் தோண்டுவார்கள்.

மலை வாழ் மக்கள்: தோண்ட தோண்ட துளை பெரிதானதும் அதில் குழாய் அமைப்பார்கள். குழாய் என்பது அதிகபட்சம் 4 அடி கூட இருக்காது. குழாய் அமைத்து உள்ளே சென்றதும் அங்கே இருக்கும் நிலக்கரியை எடுப்பார்கள். அதன்பின் கிடைமட்டமாக இன்னொரு சுரங்கம் போல தோண்டி.. வெளியே வாகனங்கள் இருக்கும் பகுதியில் நிலக்கரியை கொட்டுவார்கள். அதாவது உள்ளே சென்று நிலக்கரியை எடுத்து அதை கிடைமட்டாக வேறு சுரங்கம் தோண்டி வெளியேற்றுவார்கள்.

இவர்கள் பொதுவாக இமயமலை தொடரில் வாழும் மலை வாழ் மக்கள்தான். இவர்கள் கைகளால் தோண்டி தோண்டி துளை போட்டு அதில் குழாய் போடுவார்கள். போக போக கூடுதல் குழாய்களை அமைத்து பாதை ஏற்படுத்துவார்கள். 4 அடி கொண்ட குழாய்கள் ஆகும். இதே முறையை பயன்படுத்திதான் இங்கே பாதையை ஏற்படுத்தினார்கள். இவர்கள் குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தி வந்ததால் தடை செய்யப்பட்டு விட்டனர்.

நிலக்கரி சுரங்கங்களில்: வடகிழக்கு மாநிலங்களில் இதற்கு தடைகள் உள்ளது. எனினும் இந்தத் தடையை நீக்கக் கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மணிப்பூர் அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. சட்ட விரோதம் என்று தடை செய்யப்பட்ட இந்த முறை தான் உத்தரகாண்டில் சுரங்க தொழிலாளர்கள் மீட்க பெரிதும் கை கொடுத்துள்ளது. தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்ட பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசிய பேரிடர் மேலண்மை ஆணையத்தின் உறுப்பினர் சையது அடா ஹஸ்னைன் (ஓய்வு) என்பவரிம் இது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த ஹஸ்னைன், எலி வளை சுரங்க டெக்னிக் என்பது தடை செய்யப்பட்டதாக இருக்கலாம். ஆனால், எலி வளை தொழிலாளர்களின் திறமை மற்றும் அனுபவம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது" என்றார். எலி வளை சுரங்கப் பணி என்பது நிலக்கரி சுரங்கங்களில் முன்பு பயன்படுத்தப்பட்டு வந்தது. "எலி வளை" சுரங்கம் வழியாக செல்லும் தொழிலாளர்கள் கைகளால் சிறிய உபகரணங்களைப் பயன்படுத்தியே நிலக்கரியை வெட்டி எடுப்பார்கள்.

பெரும் திருப்பு முனை: உத்தரகாண்டில் இயந்திரங்கள் பழுது காரணமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், எலி வளை சுரங்க தொழிலாளர்கள் அழைக்கப்பட்டனர். இவர்கள்தான் மிகவும் சவாலான அந்த சுரங்கப்பகுதிக்குள் இடிபாடுகளை மண்வெட்டி உள்ளிட்டவற்றால் அகற்றினர். சில மீட்டர் தொலைவுக்கே இந்த பணியாளர்கள் தோண்டினாலும் மீட்பு பணியில் பெரும் திருப்பு முனையை இவர்களின் பணியே கொடுத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+