இந்தியாவில் ஒரு நாளைக்கு ”100 பலாத்கார சம்பவங்கள்” - அதிர்ச்சியளிக்கும் தேசிய குற்ற ஆவண காப்பகம்!

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவில் கடந்த ஆண்டில் நாள்தோறும் 100 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து இருப்பதாக அரசுத் தரப்பு ஆய்வில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

நாடெங்கும் கடந்த ஆண்டில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

36 ஆயிரம் பலாத்கார வழக்குகள்:

36 ஆயிரம் பலாத்கார வழக்குகள்:

அதில் கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 36 ஆயிரத்து 735 பலாத்கார வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும், இதில் 5 ஆயிரத்து 76 வழக்குகளுடன் மத்திய பிரதேச மாநிலம் முதலிடத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

அடுத்தடுத்த இடங்கள்:

அடுத்தடுத்த இடங்கள்:

இதற்கு அடுத்தபடியான இடங்களில் ராஜஸ்தான் (3,759), உத்தர பிரதேசம் (3,467), மகாராஷ்டிரா (3,438), டெல்லி (2,096) மற்றும் பீகார் (1,127) ஆகிய மாநிலங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரளா கூட பின்னடைவு:

கேரளா கூட பின்னடைவு:

கல்வியறிவு விகிதத்தில் முன்னிலையில் இருக்கும் கேரளா கூட பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதில் பின்னடைவை சந்தித்துள்ளது. அங்கு கடந்த ஆண்டு மொத்தம் 1,347 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.

இரண்டு பாதுகாப்பு பகுதிகள்:

இரண்டு பாதுகாப்பு பகுதிகள்:

எனினும், இந்தியாவில் பெண்களுக்கு மிதமிஞ்சிய பாதுகாப்பை வழங்கும் பகுதியாக லட்சத்தீவு மற்றும் நாகாலாந்து திகழ்கிறது.

குற்றச்சம்பவங்கள் குறைவு:

குற்றச்சம்பவங்கள் குறைவு:

இதற்கு அடுத்தபடியாக டையு, டாமன் மற்றும் தாதர் நகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் மிகவும் குறைந்த விகிதத்திலேயே உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+