பெங்களூர் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகள் 150 பேருக்கு வாந்தி, மயக்கம்
பெங்களூர்: பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் டி.ஜே.ஹள்ளி பகுதியில் அரசு உருது பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு பள்ளி வளாகத்தில் பறிமாறப்பட்டது. இதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் 8ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளில் பலருக்கும் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டுள்ளது.
சந்தேகமடைந்த தலைமை ஆசிரியர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சுமார் 150க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றனர். சம்பவம் குறித்து அறிந்ததும் அமைச்சர்கள் ராமலிங்கரெட்டி, ரோஷன்பெய்க், யூ.டி.காதர் ஆகியோர் பாதிக்கப்பட்ட மாணவர்களை நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தனர். பதற்றத்தில் இருந்த பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர்கள், துரிதகதியில் சிகிச்சையளிக்கும்படி டாக்டர்களுக்கு உத்தரவிட்டனர்.
உணவில் பல்லி விழுந்ததால் இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், மாணவர்கள் அனைவருமே அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications