ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு.. ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை இன்று மீண்டும் விசாரணை
டெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திடம் ஏர்செல்-மேக்சிஸ் நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக இன்று அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை நடத்தியது.
2006 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு சட்டத்தை மீறி ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது.

சுமார் ரூ.3,500 கோடி மதிப்புக்கு மேலான அன்னிய நேரடி முதலீடு தொடர்பான இந்த விவகாரத்திற்கு சிதம்பரம் ஒப்புதல் அளித்தது விவாதத்திற்கு உரியதாக உள்ளது.
ஏனெனில் 600 கோடி ரூபாய் வரையிலான முதலீடுகளுக்கு மட்டுமே நிதி அமைச்சரால் அங்கீகாரம் அளிக்க முடியும். அதற்கு மேலான அன்னிய முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு தான் அனுமதி வழங்க வேண்டும். இந்த விவகாரத்தில் அமைச்சரவை குழுவிடம் அனுமதி வாங்கவில்லை என்பது குற்றச்சாட்டு.
அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதலை பெறுவதற்காக சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் பினாமி நிறுவனமாகக் கருதப்படும் அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் நிறுவனம் உதவி செய்ததாகவும், அதற்கு மாறாக பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே ஜூன் 5ம் தேதி, சிதம்பரத்திடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியிருந்த நிலையில், இன்று டெல்லியில் மீண்டும் சிதம்பரத்திடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இப்போது மேலும் பல புதிய கேள்விகளை எழுப்பி சிதம்பரத்திடம் பதில் பெற்றதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வழக்கில் சிதம்பரத்தை கைது செய்ய அக்டோபர் 8ம் தேதிவரை நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications