கேன்சர் வருவதற்கு முன் ஜென்ம பாவங்களே காரணம் என்று சொன்ன அஸ்ஸாம் அமைச்சருக்கு ப.சிதம்பரம் பதிலடி
கேன்சர் வருவதற்கு செய்த பாவங்களே காரணம் என்று சொன்ன அஸ்ஸாம் அமைச்சருக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்திருக்கிறார் ப.சிதம்பரம்.
Recommended Video

டெல்லி: கேன்சர் போன்ற நோய்கள் இளவயதிலேயே வருவதற்கு காரணம் முன் ஜென்ம பாவங்களே என்று சொன்ன அஸ்ஸாம் அமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மாவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தின் சுகாதாரம் மற்றும் கல்வித்துறை அமைச்சராக இருப்பவர் ஹிமந்த பிஸ்வா சர்மா. இவர் நேற்று குவஹாத்தியில் நடந்த ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய சர்மா, நமது பாவங்களுக்கு நாம் கட்டாயம் துன்பம் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது விதி.

இளவயதிலேயே சிலருக்கு புற்றுநோய் அல்லது வேறு விதமான ஆட்கொல்லி நோய்கள் வருவதைப் பார்க்கிறோம். அது எல்லாம் அவர்களின் பாவங்களுக்கு கடவுள் கொடுக்கும் தண்டனை. அது தான் கடவுளின் நியதி. நாம் அனைவரும் அதற்கு கட்டுப்பட்டவர்களே. வேறு எதுவும் செய்ய முடியாது என்றார்.
ஒரு மாநிலத்தில் சுகாதாரத்துறையை நிர்வகிக்கும் அமைச்சரே இவ்வாறு பேசி இருப்பது அரசியல் அரங்கில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருக்கிறார். அதில், அமைச்சர் இப்படி பேசி இருப்பதற்கு காரணம் கட்சிவிட்டு கட்சி மாறினால் இப்படித்தான் பேச வேண்டி இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.
'Cancer is divine justice for sins' says Assam Minister Sharma. That is what switching parties does to a person.
— P. Chidambaram (@PChidambaram_IN) November 22, 2017
இதற்கு முன் 20 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் கட்சியில் இருந்த சர்மா, நான்கு முறை அமைச்சராக பதவி வகித்து இருக்கிறார். 2015ல் காங்கிரஸில் இருந்து பா.ஜ.க.,வுக்குத் தாவினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதைக் குறிக்கும் விதமாக ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிலடி கொடுத்து உள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications