For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமருக்கு கோவில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை: ப.சிதம்பரம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: ராமருக்கு கோவில் கட்டுவதை காங்கிரஸ் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது அவர் பணவீக்கம், இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு நிதியமைச்சரான தன்மீது அதிமுக, திமுகவினர் கூறும் குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

திமுக, ‌அதிமுக ஆகியவற்றின் அரசியல் களம் தமிழகத்தை தாண்டி செயல்பட முடியாது.

P. Chidambaram talks about Ayodhya Rama Temple

2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலை சந்திப்பத‌ற்கான ஒத்திகையாகவே அந்த இரு கட்சிகளும் தற்போது லோக்சபா தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன என்றார்.

''நாட்டில் ராமர்கோவில் கட்டுவதை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. ராமருக்கு கோயில் கட்டுவதற்கு ஆயிரம் வாசஸ்தலம் உள்ளது. ஆயிரம் இடங்கள் உள்ளது.

ஆனால், பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதைத்தான் காங்கிரஸ் எதிர்க்கிறது என்றும் ப.சிதம்பரம் கூறினார்.

English summary
Finance Minister and Congress senior leader P.Chidambaram gave Exclusive Interview to Puthiya Thalaimurai TV Channel. In this Interview, P.Chidambaram discusses about Ramar Temple issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X