செக்ஸ் தொல்லை புகார்: 'நோபல்' பச்சௌரிக்கு முன்ஜாமீன், 'டிஇஆர்ஐ'க்குள் நுழைய தடை
டெல்லி: 29 வயது பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய சுற்றுச்சூழல் நிபுணர் ஆர்.கே. பச்சௌரிக்கு டெல்லி நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
எரிசக்தி மற்றும் வளங்கள் நிறுவனத்தில் (டிஇஆர்ஐ) பணிபுரியும் 29 வயது பெண் ஒருவர் நிறுவன தலைவரும், ஐ.நா. பருவநிலை மாற்ற குழுவின்(ஐபிசிசி) தலைவருமான ஆர்.கே. பச்சௌரி தனக்கு செக்ஸ் தொல்லை கொடுப்பதாக டெல்லி போலீசில் கடந்த 13ம் தேதி புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆர்.கே. பச்சௌரியிடம் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

இந்நிலையில் அவர் முன்ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே உடல் நலக்குறைவு காரணமாக அவர் புதன்கிழமை டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிமன்றம் பச்சௌரிக்கு மார்ச் 27ம் தேதி வரை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவர் டிஇஆர்ஐ நிறுவனத்திற்குள் நுழையவும், அதன் ஊழியர்களை தொடர்பு கொள்ளவும், வெளிநாடுகளுக்கு செல்லவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 2002ம் ஆண்டில் இருந்து ஐபிசிசி தலைவராக இருந்த பச்சௌரி அந்த பதவியை கடந்த செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்தார்.
2007ம் ஆண்டு ஐபிசிசி அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்தது. அந்த பரிசை ஐபிசிசி சார்பில் பெற்றவர் பச்சௌரி என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications