தீவிரவாத தாக்குதல்: தலையில் பாய்ந்த குண்டு.. ரத்தம் வழிய வழிய சரிந்து விழுந்த கணவர்.. மனைவி கண்ணீர்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 27 பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒடிசாவைச் சேர்ந்த சிஐபிஇடி கணக்காளர் பிரசாந்த் குமார் சத்பதி, தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விடுமுறைக்குச் சென்றிருந்த நிலையில், பிராசாந்த்தும் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். பயங்கரவாதிகள் தலையில் சுட்டதில் தனது கண் முன்னே ரத்தம் சொட்டச் சொட்ட உயிரிழந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் இந்தியாவை மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சீத்தின் லஷ்கர் இ தொய்பாவின் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ராணுவ உடை அணிந்து இந்த தாக்குதலில் பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்துக்குள் 4 பயங்கரவாதிகள் திடீரென நுழைந்து துப்பாக்கியால் சுட்டு பொதுமக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 27 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் மகாராஷ்டிரம், தமிழகத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியா மட்டுமல்லாமல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், நேபாளம், இஸ்ரேலைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் உயிரிழந்துள்ளனர்.
ஒடிசாவைச் சேர்ந்த சிஐபிஇடி கணக்காளர் பிரசாந்த் குமார் சத்பதி, தனது மனைவி மற்றும் குழந்தையுடன் விடுமுறைக்குச் சென்றிருந்த நிலையில், பிராசாந்த்தும் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். பயங்கரவாதிகள் தலையில் சுட்டதில் தனது கண் முன்னே ரத்தம் சொட்டச் சொட்ட உயிரிழந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
ஒடிஷா மாநிலம், பாலசோரில் உள்ள மத்திய பெட்ரோ கெமிக்கல் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வந்தவர் பிரசாந்த் குமார் சத்பதி. இவர் ஏப்ரல் 19 ஆம் தேதி தனது மனைவி மற்றும் ஒன்பது வயது மகனுடன் காஷ்மீருக்குச் சென்றுள்ளார். அங்கு திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில் பிரசாந்தின் தலையில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்கியுள்ளனர். இதில், ரத்தம் சொட்ட சொட்ட மனைவியின் கண் முன்னரே பிரசாந்த் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து, பிரசாந்தின் மனைவி பிரியதர்ஷினி கூறியுள்ளதாவது: பஹல்காமில் ரோப்வே சவாரி செய்தோம். பின்னர் சாப்பிடுவதற்காக உணவகத்திற்குச் சென்று கொண்டிருந்தோம். அப்போது, திடீரென பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது துப்பாக்கியால் சுடப்பட்டதில் என் கணவர் தலையில் இருந்த ரத்தம் வழிய வழிய என் முன் சரிந்து விழுந்தார். அவரைக் காப்பாற்றுவதற்காக உதவிக்காக அப்பகுதியில் உள்ளவர்களை நான் அழைக்கச் சென்றிருந்த நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த ராணுவ வீரர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருந்தனர் என்றார்.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முதலமைச்சர் மோகன் சரண் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். பிரசாந்தின் உடல் வீடு திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்று டெல்லியில் உள்ள ஒடிசாவின் தலைமை குடியிருப்பு ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த தாக்குதல் சம்பவம் கொடூரமான மற்றும் மிருகத்தனமான செயல் என்றும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த பிரசாந்தின் உறவினர்கள் ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் உதவி எண்களைத் தொடர்பு கொள்ள தீவிரமாக முயற்சித்துள்ளனர். இந்நிலையில், அனந்த்நாக் காவல் துறையினர் பிரசாந்தின் மரணத்தை உறுதி செய்துள்ளனர். பிரசாந்தின் உடல் ஸ்ரீநகரில் உள்ள கண்டோன்மென்டுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாந்தின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல உள்ளூர் அதிகாரிகள், ஜம்மு காஷ்மீர் நிர்வாகிகளுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications