அதிகரிக்கும் பதற்றம்: காஷ்மீரில் தாக்குதல் நடத்தப்படும் அபாயம் .. முக்கிய சுற்றுலா தலங்கள் மூடல்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் புல்மேடு பகுதியில் கடந்த வாரத்தில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தச் செய்துள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய சுற்றுலா தலங்கள மூடப்பட்டுள்ளன.
மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் புல்மேடு பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். 12 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்த சம்பவம் இந்தியா முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானியர்கள் விசா ரத்து, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றுவது, இருநாட்டு எல்லைகள் மூடல் என தொடர்ந்து இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் இந்தியாவுக்கு எதிராக பேசி வருவது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவுக்கு பல்வேறு நாடுகளும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. பாகிஸ்தானின் முக்கிய நீராதாரமாக விளங்கும் சிந்து நதி நீரை நிறுத்தினால் அதனைப் போராகவே கருதுவோம் என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
இந்திய விமானப்படை, தரைப்படை, கப்பற்படை என முப்படைகளும் போருக்குத் தயார் நிலையில் உள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த கொடூர பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானில் ஆயுத பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதி ஹாஷிம் மூசா மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தானிடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள தூஷ்பத்ரி, கோகர்நாக், டக்சம், சிந்தன் டாப், அச்சாபல், பங்கஸ் பள்ளத்தாக்கு, மார்கன் டாப் மற்றும் டோசமைதான் உள்ளிட்ட 48 முக்கிய சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் 87 சுற்றுலா தலங்களில், 48 சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ உத்தரவு பிறக்கப்படவில்லை. இருப்பினும், இந்த இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடும் பதற்றம் நிலவி வருவதால் வரும் நாட்களில் கூடுதலாக சில சுற்றுலா தலங்கள் மூடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications