காஷ்மீரில் இந்திய கிராமத்தை ஆக்கிரமித்தது பாகிஸ்தான்! எல்லையில் பதற்றம்!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. அத்துடன் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்து திடீர் தாக்குதல்களையும் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் நியூயார்க்கில் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
இதனிடையே கடந்த செப்டம்பர் 23-ந் தேதியன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஷாலா படா என்ற எல்லையோர கிராமத்தை பாகிஸ்தான் ராணுவத்தினர் ஆக்கிரமித்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த கிராமம் கைவிடப்பட்ட கிராமம். இங்கு மக்கள் கைவிட்டுச் சென்ற வீடுகளில் தற்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவத்தினரை வெளியேற்ற இந்திய படையினர் தாக்குதல் நடத்தி வருவதாகவும் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணுவம் விளக்கம்
இதனிடையே இது தொடர்பாக விளக்கம் அளித்த லெப். ஜெனரல் குர்மீத் சிங், எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவல்தான் இருந்து வருகிறது. எல்லையில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. வதந்திகள் பரவவிடக் கூடாது. அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்துவிட்டன என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications