14 நாள் விசாரணையில் பாக். தீவிரவாதி நவேத்தை எடுத்தது தேசிய புலனாய்வு ஏஜென்சி
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூரில் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி முகம்மது நவேத் யாகூப்பை, 14 நாள் காவலில் எடுத்துள்ளது தேசிய புலனாய்வு ஏஜென்சி.
கடந்த வாரம் நடந்த உதம்பூர் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தவுள்ளது தேசிய புலனாய்வு ஏஜென்சி.

உதம்பூரில் நடந்த சம்பவத்தின்போது அமர்நாத் யாத்ரீகர்களைக் குறி வைத்து தீவிரவாதிகள் இருவர் துப்பாக்கிகளால் சுட்டனர். இதையடுத்து பாதுகாபுப் படையினர் திருப்பிச் சுட்டதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். இந்தியத் தரப்பில் 2 பேர் பலியானார்கள். யாகூப் மட்டும் உயிருடன் பிடிபட்டான்.
லஷ்கர் இ தொய்பாவால் பயிற்சி அளிக்கப்பட்டு இந்தியாவுக்குள் அனுப்பி வைக்கப்பட்டவன் யாகூப். யாகூப் தங்களது பிள்ளைதான் என்பதை அவனது தந்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் யாகூப்பை லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கொல்ல முயலலாம் என்ற அச்சுறுத்தல் இருப்தபால், அவனை டெல்லிக்கு மாற்றும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. இதையடுத்து இன்று காலை யாகூப்பை தேசிய புலனாய்வு ஏஜென்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் போலீஸார்.
இதையடுத்து 14 நாள் காவலில் வைத்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு கோர்ட் அனுமதி அளித்தது. இதையடுத்து டெல்லி கொண்டு செல்லப்படவுள்ளான் யாகூப். அங்கு பாதுகாப்பான இடத்தில் வைத்து விசாரிக்கப்படவுள்ளான்.
யாகூப்புடன் இந்தியாவுக்குள் ஊடுறுவி வந்த நோமன் என்ற தீவிரவாதி உதம்பூர் தாக்குதலின்போது கொல்லப்பட்டு விட்டான் என்பது நினைவிருக்கலாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications