பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் மீண்டும் துப்பாக்கி சூடு- ராணுவம் பதிலடி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறி அவ்வப்போது இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது.

அண்மைக்காலமாக எல்லையில் அமைதி நிலவிய நிலையில், இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. காத்வா மாவட்டம் பான்சார் எல்லை சோதனை சாவடி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியது.
சிறியரக துப்பாக்கிகள் மற்றும் மோட்டார் பீரங்கிகளைக் கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு நமது ராணுவம் பதிலடி கொடுத்தது. அதிகாலை 1.30 மணிக்கு தொடங்கிய துப்பாக்கி சூடு 3.30 மணிவரையில் நீடித்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் மற்றும் அக்டோபர் மாதங்களில் எல்லையில் இந்திய நிலைகள் மற்றும் கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதையடுத்து பாகிஸ்தான் அடாவடியை நிறுத்திக் கொண்டது.
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். சுமார் 32 ஆயிரம் கிராம மக்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications