காஷ்மீரில் பாக். மீண்டும் அத்துமீறல்.. 2 பொதுமக்கள் பலி
காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
காஷ்மீர்: காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி இருக்கிறது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
காஷ்மீர் அருகே இருக்கும் ஆர்.எஸ் புரா செக்டார் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் உள்ளே புகுந்து இந்த தாக்குதலை நடத்தி இருக்கிறது.

இந்திய ராணுவம் இல்லாத பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இந்த தாக்குதலை நிகழ்த்தி இருக்கிறது. பாக். தாக்குதலில் 2 பொதுமக்கள் மரணம் அடைந்தனர்.
மேலும் 4 பேர் மோசமாக காயம் அடைந்தனர். இவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அங்கு விரைந்து வந்த இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்தது. ஏற்கனவே ஆர்.எஸ் புராவில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஏ. சுரேஷ் பரிதாபமாக மரணம் அடைந்தார்.
மேலும் 3 இந்திய வீரர்கள் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தான் இந்த மாதம் மட்டும் மூன்றாவது முறையாக எல்லையில் அத்துமீறுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications