ஆந்திராவின் புதிய தலைநகர் அமராவதியை கண்டு நடுங்கும் பாகிஸ்தான்! ஏன் தெரியுமா?
ஹைதராபாத்: ஆந்திர மாநில அரசு அமராவதியை தனது தலைநகராக உருவாக்க முயற்சி மேற்கொண்டுவரும் நிலையில், அங்கு அணு குண்டு தயாரிக்க இந்தியா திட்டம் வைத்துள்ளதாக பாகிஸ்தான் டிவி சேனலில் விவாத நிகழ்ச்சியே நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதி, தெலுங்கானா மாநிலமாக பிரிக்கப்பட்டு, ஹைதராபாத் அதன் தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆந்திர அரசு, தனக்கென ஒரு தலைநகரத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டுவருகிறது.

தலைநகரம் அனைத்து நவீன வசதிகளை கொண்டிருக்க வேண்டும் என்பதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு உறுதியாக உள்ளார். எனவே கிருஷ்ணா நதியை ஒட்டியுள்ள அமராவதியை தலைநகரமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நகரில் தலைமைச் செயலகம் அமைக்கும் பணியை, மகி மற்றும் அசோசியேட் என்ற சர்வதேச நிறுவனத்திடம் ஆந்திர அரசு அளித்துள்ளது. சமீபத்தில், தலைமைச் செயலக மாதிரியை அந்த நிறுவனம் அரசிடம் அளித்தது. ஆனால், அந்த டிசைன் பிடிக்கவில்லை என அரசு நிராகரித்துவிட்டது.
கூடங்குளம் அணு உலை அல்லது தாஜ்மகாலின் மேற்பரப்பு போல குவிந்த நிலையில் உள்ள மேற்பரப்பு கொண்ட கட்டிடத்தை தலைமைச் செயலகமாக உருவாக்க அந்த நிறுவனம் முன்வந்ததால், அதை ஆந்திர அரசு ஏற்கவில்லை.
ஆனால், இந்த வடிவமைப்பை பார்த்து அமராவதியில் அணு குண்டு தயாரிக்கும் திட்டத்தை இந்தியா செயல்படுத்துவதாக அங்குள்ள டிவி மீடியா ஒன்று சமீபத்தில் விவாத நிகழ்ச்சி நடத்தியுள்ளது.
குறிப்பாக ஹைட்ரஜன் அணுகுண்டு தயாரிக்கத்தான் இந்த நகரம் உருவாக்கப்படுவதாகவும், ஜப்பான், சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகளை சேர்ந்த அதிகாரிகள், அமராவதிக்கு வந்து செல்வதாகவும், இது தங்கள் சந்தேகத்தை உறுதி செய்வதாகவும் அந்த டிவி சேனல் விவாதத்தில் பேசியுள்ளனர்.
ஆந்திர டிவி சேனல் ஒன்று நேற்று இந்த விவாத நிகழ்ச்சி துணுக்குகளை தங்களது சேனலில் ஒளிபரப்பியது. இதை பார்த்த ஆந்திர மக்கள் பாகிஸ்தான் பண்டிதர்களை நினைத்து, சிரிப்பதா, அழுவதா என்று தெரியாமல் இருக்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications