வெள்ளைக் கொடியுடன் வந்து உடல்களை எடுத்து செல்லுங்கள்.. பாக்.கிற்கு இந்திய ராணுவம் பகிரங்க அழைப்பு
நேற்று இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல வெள்ளைக் கொடியுடன் வாருங்கள் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.
ஸ்ரீநகர்: நேற்று இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்ல வெள்ளைக் கொடியுடன் வாருங்கள் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.
நேற்று காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் ''பேட் தாக்குதல்'' நடத்த முயற்சி செய்தது. ஆனால் இதை இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இந்த தாக்குதல் காஷ்மீர் எல்லையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியாவில் பிஎஸ்பி எனப்படும் பார்டர் செக்கியூரிட்டு போர்ஸ் - எல்லை பாதுகாப்பு படை உள்ளது. இவர்கள்தான் இந்திய காஷ்மீர் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.

பேட் படை
பிஎஸ்பி படை போல பாகிஸ்தானில் பேட் எனப்படும் Border Action Team உள்ளது. மற்ற நாட்டின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்துவதற்கு Border Action Team தான் எப்போதும் பாகிஸ்தான் ராணுவத்தால் பயன்படுத்தப்படும். இவர்கள் கடந்த சனிக்கிழமை காஷ்மீர் எல்லையில், குப்வாரா மாவட்டத்தில் உள்ள கேரன் பகுதியில் நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளனர்.

மரணம்
இந்த தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர், 5-7 பேட் டீம் வீரர்களை கொன்றனர். இதில் சில தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். இதனால் காஷ்மீரில் மிகவும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இப்போது என்ன
இந்த நிலையில் நேற்று இந்திய ராணுவத்தால் கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்ல வெள்ளைக் கொடியுடன் வாருங்கள் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது. வெள்ளைக்கொடியுங்கள் வந்தால் தாக்க மாட்டோம். உங்களுக்கு விருப்பமான நேரத்தில் வந்து உடலை எடுத்து செல்லுங்கள் என்று இந்திய ராணுவம் அதிரடியாக கூறியுள்ளது.

பதில்
ஆனால் இதற்கு பாகிஸ்தான் பாதுகாப்பு படையில் இருந்து பதில் வரவில்லை. இதற்கு முன்பு இதேபோல் இந்திய ராணுவம் அழைத்த போதெல்லாம் பாகிஸ்தான் அதை ஏற்றுக்கொண்டது இல்லை. அதேபோல்தான் இப்போதும் நடக்கும். அப்போதெல்லாம் பாகிஸ்தான் வீரர்களின் உடல்கள் இந்திய மண்ணில் புதைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
