உங்கள் முடிவை மாற்றிக்கொள்ளுங்கள்.. பாகிஸ்தானுக்கு இந்தியா பகிரங்க எச்சரிக்கை.. சிக்கல்!
பாகிஸ்தான் இந்தியாவுடன் உறவை முறித்துக் கொள்வதாக எடுத்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் இந்தியாவுடன் உறவை முறித்துக் கொள்வதாக எடுத்த முடிவை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ததை அடுத்து இந்தியாவுடன் பாகிஸ்தான் மொத்தமாக உறவை முறித்துள்ளது. இந்தியாவுடன் அனைத்து விதமான தூதரக உறவுகளையும் பாகிஸ்தான் முறித்துக் கொள்கிறது.
எந்த விதமான அரசு தொடர்பான உறவுகளும் இனி இருக்காது. இரண்டு நாட்டு தூதரக அதிகாரிகளும் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

பாகிஸ்தான்
இதுகுறித்து தற்போது இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் இது போல ஏதாவது முடிவை எடுக்கும் என்று கண்டிப்பாக தெரியும். அவர்கள் ஜம்மு காஷ்மீரில் நடக்கும் விஷயங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைப்பார்கள். இதை உலகிற்கு அவர்கள் தவறாக எடுத்துக்காட்ட நினைப்பார்கள். தற்போது அதைத்தான் செய்து வருகிறார்கள்.

எப்படி காஷ்மீர்
காஷ்மீரில் பாகிஸ்தான் செய்யும் எல்லை மீறலையும், தீவிரவாத நடவடிக்கைகளையும் நியாயப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். அதைதான் அவர்கள் இப்போதும் செய்து இருக்கிறார்கள். மக்களை தூண்டிவிட அவர்கள் முயற்சி செய்வார்கள்.

இப்போது என்ன
அதனால்தான் தற்போது அவர்கள் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். இந்தியாவிற்கு எதிராக வியாபார மற்றும் ராஜாங்க உறவை முறித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் எங்களை விட பாகிஸ்தான்தான் அதிகம் கஷ்டப்பட போகிறது.

என்ன முடிவு
பாகிஸ்தான் உடனடியாக தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மிக கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். நாங்கள் இந்திய சட்டங்களின்படிதான் காஷ்மீரை பிரித்துள்ளோம். அதனால் உலக நாடுகள் எங்கள் பக்கமே நிற்கும், என்று இந்திய வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications