பாகிஸ்தான் படகு விவகாரம்: கடலோர காவல்படை டி.ஐ.ஜி. மறுப்பு! பாதுகாப்பு அமைச்சர் வார்னிங்!!
டெல்லி: பாகிஸ்தான் தீவிரவாத படகை தகர்க்க தாம் உத்தரவிட்டதாக வெளியான ஊடகங்களின் தகவலை கடலோர காவல்படை டி.ஐ.ஜி. பி.கே. லோஷாலி மறுப்பு தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கருத்துக்கு முரண்பாடான வகையில் லோஷாலி கருத்து தெரிவித்திருந்தால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாயும் என்று பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சி அருகே கேத்திபந்தர் என்ற இடத்தை சேர்ந்த மீன்பிடி படகு ஒன்று கடந்த டிசம்பர் 31-ந் தேதி இரவு குஜராத் மாநிலத்தில் உள்ள போர்ப்பந்தர் நகரில் இருந்து தென்மேற்கே சுமார் 365 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் ஊடுருவியது.
கடலோர காவல்படை கப்பல் அந்த படகை விரட்டிச்சென்றது. இதனால் பயந்துபோன படகில் இருந்த 4 பேரும் உடனடியாக படகின் கீழ்தளத்துக்கு ஓடி, படகுக்கு தீ வைத்தனர். இதில் அந்த படகு வெடித்து சிதறியது. படகில் இருந்த 4 பேரும் பலியாயினர்.
படகில் இருந்த 4 பேரும் தற்கொலைப் படையை சேர்ந்த தீவிரவாதிகளாக இருக்கலாம் என்றும் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி நடைபெற்ற மும்பை தாக்குதல் பாணியில் மீண்டும் பயங்கர தாக்குதல் நடத்துவதற்காக வந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து படகு மூலம் ஊடுருவல் சம்பவம் நடைபெற்றதையடுத்து நாடு முழுவதும் உள்ள கடலோர எல்லைகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தீவிரவாத படகை தகர்க்க தான் உத்தரவிட்டதாக வெளியான தகவலை கடலோர காவல்படை டி.ஐ.ஜி. பி.கே. லோஷாலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாத படகை தகர்க்க கடலோர காவல்படை டி.ஐ.ஜி. பி.கே. லோஷாலி உத்தரவிட்டார் என்று கடந்த ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. "தீவிரவாத படகை தகருங்கள்.... அவர்களுக்கு நாம் பிரியாணி வழங்கிசேவை செய்ய வேண்டாம்..." என்று லோஷாலி கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இவ்விவகாரத்தில் அரசு கூறியதற்கும், இந்த தகவலுக்கும் இடையே முரண்பாடு காணப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பாக எழுத்துப்பூர்வமான அறிக்கை வெளியிட்டுள்ள பி.கே. லோஷாலி, அந்த ஆபரேஷன் என்னுடைய தலைமையில் நடைபெறவில்லை; இதுதொடர்பாக வெளியான தகவலில் உண்மையில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
"எந்த தகவல்கள் மீடியாவில் வெளியானது...... அது உண்மையானது இல்லை. அதுஎன்னுடைய உரையில்லை. நான் இதுபோன்ற அறிக்கையை வெளியிட்டது இல்லை. இருப்பினும், தேசத்திற்கு எதிரான சக்திகளுக்கு பிரியாணி வழங்கி சேவை செய்ய தேவையில்லை மற்றும் சட்டத்தின்படி நடத்தப்பட வேண்டியது இல்லை என்று நான் பேசியிருக்கிறேன் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.
பாரிக்கர் எச்சரிக்கை
இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கருத்து தெரிவிக்கையில், பாகிஸ்தான் படகு விவகாரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் என்ன அறிவித்ததோ அதுதான் இப்போதும்... ஆனால் இந்த கருத்துக்கு மாற்றக் கடலோரக் காவல்படை டி.ஐ.ஜி. தெரிவித்திருந்தால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications