காஷ்மீரில் மீண்டும் பாகிஸ்தான் ராணும் துப்பாக்கிச்சூடு? மறுத்த இந்திய ராணுவம்.. முக்கிய விளக்கம்
ஜம்மு காஷ்மீர்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே உள்ள கிருஷ்ணா காதி செக்டாரில் இன்று திடீரென்று பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும், அதற்கு நம் ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்திய ராணுவம் அதனை மறுத்து முக்கிய விளக்கம் அளித்துள்ளது.
நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நீண்ட காலமாக பகை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு தீனி போட்டு வளர்ப்பது தான் காரணம். உலகம் முழுவதும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் சப்ளை செய்யப்படுகின்றனர்.

இந்தியா உள்பட பல நாடுகள் எதிர்த்தாலும் கூட பாகிஸ்தான் திருந்தவில்லை. இந்நிலையில் தான் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பாகிஸ்தான் ஆதரவு பயங்கவராதிகள் நம் நாட்டுக்குள் நுழைந்து ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 26 பேர் வரை இறந்தனர்.
இதையடுத்து நம் நாடு பாகிஸ்தானுக்கு உரிய முறையில் பதிலடி கொடுத்தது. ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலமாக மே 7 ம் தேதி நள்ளிரவில் நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. பாகிஸ்தானில் உள்ள 9 ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டது. அதேபோல் பாகிஸ்தானின் ராணுவ தளம், விமானப்படை தளம் அழிக்கப்பட்டது. நம் நாடு அடித்த அடியில் பாகிஸ்தான் கதிகலங்கியது.
இதையடுத்து பாகிஸ்தான் நம் காலில் விழுந்தது. எங்களை தாக்காதீங்க.. விட்டு விடுங்கள் என்று மண்டியிட்டது. இதையடுத்து நம் நாடு மோதலை கைவிட்டது. இருப்பினும் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை இன்னும் முடியவில்லை. பாகிஸ்தான் மீண்டும் தாக்கினால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று நம்நாடு அறிவித்து இருந்தது.
இந்நிலையில் தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இன்று பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் உள்ளது. இது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. இந்த மாவட்டத்தில் இருநாடுகளை பிரிக்கும் எல்லை கட்டுப்பாட்டு கோடு செல்கிறது. இந்நிலையில் தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே கிருஷ்ணா காதி செக்டார் எனும் பகுதி உள்ளது.
இன்று திடீரென்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி கிருஷ்ணா காதி செக்டாரில் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளதாகவும், நம் நாட்டின் ராணுவம் சார்பில் எந்தவித தூண்டுதலும் இல்லாத நிலையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. அதோடு பாகிஸ்தான் ராணுவத்துக்கு நம் நாட்டின் ராணுவமும் உரிய முறையில் பதிலடி கொடுத்த நிலையில் 15 நிமிடங்கள் வரை இந்த துப்பாக்கிச்சண்டை நீடித்ததாக தகவல்கள் வெளியாகின.
மேலும் கடந்த 2019ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. இது கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி தான் செய்யப்பட்டது.அதன்பிறகு ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டதன் 6வது ஆண்டு விழா இன்று பல இடங்களில் நடத்தப்பட்டது. இதுதான் பாகிஸ்தான் ராணுவம் இந்த துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்தி உள்ளதாக சொல்லப்பட்டது.
முன்னதாக நேற்றைய தினம் நள்ளிரவில் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் காஷ்மீரில் திடீரென பறந்தன. இதனால் இன்றைய துப்பாக்கிச்சூடு தொடர்பான செய்திகள் மீடியாக்களில் வெளியானது. ஆனால் இந்த விவகாரத்தை இந்திய ராணுவம் மறுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ராணுவம் சார்பில், ‛‛சில மீடியா மற்றும் சமூக வலைதளங்களில் பூஞ்ச் பிராந்தியத்தில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே போர் நிறுத்த ஒப்பந்தம் எதுவும் மீறப்படவில்லை'' என்று இந்திய ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications