குஜராத்தில் பாக். தேசியக் கொடியை வாட்ஸ் அப் புரபைல் படமாக வைத்த மேலும் ஒருவர் கைது!
பூஜ்: குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தானை ஆதரிக்கும் வகையில் அந்நாட்டு தேசியக் கொடியை வாட்ஸ் அப் புரபைல் படமாக வைத்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது கட்ச் பிரதேசம். கடல் வழியாகவும் தரை வழியாகவும் கட்ச் பிரதேசம் பாகிஸ்தானுடன் எல்லையாக இருக்கிறது.

அண்மையில் கட்சி பகுதியைச் சேர்ந்த சிலர் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் தங்களது புரபைல் படமாக பாகிஸ்தான் தேசியக் கொடியை வைத்திருப்பதாக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போலீசிடம் புகார் தெரிவித்திருந்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தற்போது அப்தாசா அருகே பைதரா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஹூசைன் ஃபகீர் என்பவர் வாட்ஸ் அப்பில் பாகிஸ்தான் தேசியக் கொடியை புரபைல் படமாக வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ். கொடிகள் பறக்கவிடும் சம்பவங்கள் தொடர் கதையாகும் நிலையில் குஜராத்திலும் பாகிஸ்தான் ஆதரவு குரல்கள் எழத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.,
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications