இணையதளத்தில் வெளியான போலி வீடியோ... போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்த ஆஷா சரத்

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: சமீப காலமாக நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் போலியாக உருவாக்கப்பட்டு அவை அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

நடிகை திரிஷாவில் தொடங்கி நயன்தாரா, பூஜா குமார், ஸ்ரீதிவ்யா என்று வரிசையாக நடிகைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஆகியவை தவறான முறையில் சித்தரிக்கப்பட்டு இணையதளங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.

Papanasam Actress Asha Sarath Files Complaint Against Fake Video

அந்த வரிசையில் தற்போது புதிதாக இணைந்து இருக்கிறார் நடிகை ஆஷா சரத், ஆஷா சரத்தை தவறுதலாக சித்தரித்து தவறான வீடியோ ஒன்று தற்போது வாட்ஸ் ஆப்பில் வலம் வருகின்றது.

இதனை அறிந்த ஆஷா கொச்சி போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து, இந்த தவறான வீடியோவைப் பரப்பியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார்.

த்ரிஷ்யம் மலையாளப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த ஆஷா சரத் அதன் மொழிமாற்றுப் படங்களான கன்னட த்ரிஷ்யா மற்றும் தமிழ் பாபநாசம் படங்களில் காவல் துறை அதிகாரியாக நடித்துப் புகழ்பெற்றவர்.

தற்போது கமலின் அடுத்த படமான தூங்காவனம் படத்திலும் ஆஷா சரத் அவருக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+