முத்துக்கிருஷ்ணன் பிரேத பரிசோதனையை வீடியோ பதிவு செய்ய வேண்டும்... தந்தை கோரிக்கை
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆய்வு பட்டம் படித்து வந்த சேலம் மாணவர் முத்துகிருஷ்ணனின் சாவில் மர்மம் இருப்பதால் பிரேத பரிசோதனையை விடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அவரது தந்தை கோரிக்கை விடுத்
டெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சேலம் மாணவரின் சாவில் மர்மம் இருப்பதால் பிரேத பரிசோதனையை விடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அவரது தந்தை ஜீவானந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (30).இவர் டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றில் ஆய்வு பட்டம் படித்து வந்தார். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த மாணவர், ஹோலி பண்டிகையை கொண்டாட முனிர்க்கா பகுதியில் உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்றார்.

அப்போது உறங்க செல்வதாக அறைக்கு சென்றவர் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த மாணவர்கள் போலீஸுக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடம் விரைந்த போலீஸார் கதவை உடைத்து பார்தத்தில் முத்துக்கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் தனது மகனின் சாவில் மர்மம் இருப்பதால் மகனின் உடலை வாங்க மாட்டோம் என்று முத்துக்கிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனது மகன் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல. எனது மகனின் உடலை மருத்துவர்கள் குழு முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும்.
அதை விடியோ பதிவாக எடுக்க வேண்டும். மேலும் எனது மகன் மரணம் குறித்து நீதி விசாரணைக்கும், சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications