மகளின் திருமணம் நின்றதால் பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
பிரோசாபாத்: உத்தர பிரதேசத்தில் மகளின் திருமண நின்றுபோனதால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் வசித்து வந்தவர் ஜமுனா பிரசாத் பன்சால்(55). அவரது மனைவி ஷஷி(48). அவர்களின் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
வரும் 24ம் தேதி திருமணம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் சில காரணங்களால் திருமணம் நின்றுவிட்டது. இதனால் பன்சாலும் அவரது மனைவியும் மனமுடைந்தனர். இந்நிலையில் அவர்கள் இன்று காலை விஷம் குடித்தனர். உடனே அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்கொலை செய்து கொண்ட தம்பதிக்கு நிதி பிரச்சனை வேறு இருந்ததாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications