சி.ஏ.ஜி.யில் குற்றச்சாட்டு... நிதின் கட்காரி பதவி விலக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
டெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதவி விலக வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டதால் சபைகளின் நடவடிக்கைகள் முடங்கின.
மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியை பங்குதாரராக கொண்டு இயங்கி வரும் புர்த்தி சாகர் நிறுவனம், மானிய திட்டங்களுக்கான விதிமுறைகளை மீறியதாக மத்திய தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ராஜ்யசபாவில் கடந்த வெள்ளிக்கிழமை புயலை கிளப்பியது.

இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி பேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதவி விலக வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பியதால் சபை நடவடிக்கை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த பிரச்சினையால் 2-வது நாளாக நேற்றும் ராஜ்யசபா முடக்கியது. மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பதவி விலக வலியுறுத்தி ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக அமளியில் ஈடுபட்டன.
இவ்விவகாரத்தை எதிர்க்கட்சிகள் இன்றும் சபையில் எழுப்பின. லோக்சபாவில் நிதின் கட்காரி விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதேபோன்று ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து இரு சபைகளின் நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஆனாலும் இதை நிதின் கட்காரி தொடர்ந்து மறுத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications