சச்சின் முதல் ஹேமமாலினி வரை... நாடாளுமன்றத்தில் சொதப்பிய, ஜொலித்த நட்சத்திரங்கள் யார்?
டெல்லி: சச்சின் டெண்டுல்கர் சரிவர நாடாளுமன்றத்துக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சச்சினை ராஜ்யசபா உறுப்பினராக நியமித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜிவ் சுக்லாவே, சச்சினை கண்டித்தார். இதேபோல சினிமா நடிகர்கள் சிலரையும் பல கட்சிகள் ராஜ்யசபா எம்.பிக்களாக்கினர். அவர்களின் வருகை பதிவேடு எப்படி உள்ளது என்பதை பார்க்கலாம்.

டக் அவுட்டான டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர் இந்தாண்டில் இதுவரை எந்த ஒரு கூட்டத்தொடரிலும் பங்கேற்கவில்லை. கடந்த நாடாளுமன்ற ஆயுட்காலமான 2009-14க்கு இடைப்பட்ட காலத்தில் பாதியில்தான் சச்சின் ராஜ்யசபா உறுப்பினராக்கப்பட்டார். இந்த நாடாளுமன்ற காலகட்டத்தில் அவரது வருகை பதிவு 3 சதவீதமாக இருந்துள்ளது. மருத்துவ காரணங்களால் நாடாளுமன்றம் பக்கம் வரமுடியவில்லை என்று சச்சின் டெண்டுல்கர் விளக்கம் தெரிவித்துள்ளார்.

பிளாப் கொடுத்த நடிகை
ஹிந்தி நடிகை ரேகா 2012ல் ராஜ்யசபா உறுப்பினராக்கப்பட்டவர். ஆனால் வருகை பதிவோ வெறும் 5 சதவீதம்தான். குளிர்கால கூட்டத்தொடரின்போது மட்டுமே அதிகப்படியாக இவர் பங்கேற்றுள்ளார். அதுவும் 10 சதவீதம்தான்.

கனவை கலைத்த கனவு கன்னி
முன்னாள் கனவு கன்னி, ஹேமமாலினி, தற்போது மதுராவில் இருந்து லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் 2012ல் கர்நாடகாவில் இருந்து பாஜக சார்பில் இவர் ராஜ்யசபா உறுப்பினராக்கப்பட்டார். 2014ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியை இழக்கும்வரை இவர் 14 சதவீத வருகை பதிவுதான் வைத்துள்ளார். லோக்சபா எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது ஒருநாள் கூட வரவில்லையாம்.

அசத்திய அமிதாப் மனைவி
பிற நட்சத்திரங்களைவிட அமிதாப்பச்சன் மனைவி, ஜெயாபச்சன், பொறுப்பான ராஜ்யசபா உறுப்பினராக செயல்பட்டுவருவது பாராட்டத்தக்கது. 2010ம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியில் இருந்து எம்.பியாக்கப்பட்ட ஜெயாபச்சன், 2010-13க்கு இடைப்பட்ட காலத்தில் 58 சதவீத வருகை பதிவு வைத்துள்ளார். மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல், டெல்லி பலாத்காரம் போன்ற முக்கிய சம்பவங்களின்போது நடந்த விவாதங்களில் ஆர்வமுடன் பங்கேற்று அசத்தினார்.

சபாஷ்.. சத்ருகன் சின்ஹா
பாஜக எம்.பியும் நடிகருமான சத்ருகன் சின்ஹா, செல்லமாக 'சவுட்டிங் சின்ஹா' என்றுதான் பாலிவுட் வட்டாரத்தில் அழைக்கப்படுவார். அப்படிப்பட்ட சத்தம்போட்டு பேசும் இயல்புடையவர் நாடாளுமன்றம் வராமல் இருப்பாரா. இவர்தான் நட்சத்திரங்களிலேயே அதிகம் ஜொலிக்க கூடியவர். ஆம். 77 சதவீத வருகைப்பதிவை இவர் வைத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications