நீங்க ஏன் மோடியை எதிர்த்து போட்டியிடக்கூடாது? மம்தாவுக்கு பாஜக விரிக்கும் வலை.. சவாலை ஏற்பாரா?
கொல்கத்தா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து ஏன் போட்டியிட துணிச்சல் இருக்கிறதா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பாஜக சவால் விடுத்துள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று 3வது முறையாக மத்தியில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக உள்ளது. ஆனால் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக ‛இந்தியா' என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் 4வது ஆலோசனை கூட்டம் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்தது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்துள்ளார். அதோடு பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் சோனியா காந்தியின் மகளும், ராகுல் காந்தியின் தங்கையுமான பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என அவர் விரும்புவதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் மம்தா பானர்ஜிக்கு பாஜக சார்பில் சவால் விடுக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநில பாஜக பொதுச்செயலாளரும், அசன்சோல் தெற்கு தொகுதியின் பாஜக எம்எல்ஏவுமான அக்னிமித்ரா பால் இந்த சவாலை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து ஏன் மம்தா பானர்ஜி போட்டியிடக்கூடாது? பிரியங்கா காந்திக்கு பதில் மம்தா பானர்ஜி அங்கு போட்டியிட வேண்டும். அவர் பிரதமர் ஆக விரும்புகிறார் அல்லவா? அப்படியெனில் பிரதமருக்கு எதிராக களமிறங்குவது தான் மிகவும் பொருத்தமானதாக இருக்கும். இந்த விஷயத்தில் பொறுத்திருந்து பார்ப்போம். மம்தா பானர்ஜிக்கு எவ்வளவு துணிச்சல் இருக்கிறது என்று" என சவால் விடுத்துள்ளார்.

இந்நிலையில் தான் இவரது இந்த பேச்சுக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அல்லது அவரது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்னும் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அதோடு தற்போது ‛இந்தியா' கூட்டணி கட்சிகள் இடையே சுமூகமான நிலைமை நிலவவில்லை என கூறப்படுகிறது. மேலும் மம்தா பானர்ஜி தற்போது மேற்கு வங்க முதல்வராக உள்ளார். இதனால் அவர் வரும் தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட ரிஸ்க் எடுக்கமாட்டார்.
மாறாக ஒருவேளை அவர் தனது மருமகனை அபிசேக் பானர்ஜியை மேற்கு வங்க முதல்வராக்கும் முனைப்பில் தேசிய அரசியலில் நுழைய முயன்றால் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கு உள்ள ஒரு தொகுதியில் தான் அவர் களமிறங்குவார் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications