வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆவது ஆண்டு தினம்.. 9ம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம்

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆவது ஆண்டை நினைவு கூறும் வகையில் நாடாளுமன்றத்தில் வரும் 9-ஆம் தேதி சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் 9ம் தேதி நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தை காந்தியடிகள் தொடங்கினார். இதன் முக்கிய நோக்கமே ஆங்கிலேயரை வெளியேற்ற வேண்டும் என்பதுதான்.

Parliament to hold special session on Aug 9 to mark Quit India Movement

இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆகஸ்ட் புரட்சி என்றழைக்கப்படும் இந்த இயக்கத்தின் 75-ஆவது ஆண்டை நினைப்படுத்தும் வகையில் வரும் 9-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது.

அன்றைய தினம் அவையில் வழக்கமாக நடைபெறும் கேள்வி நேரம், பூஜ்ய நேரம் ஆகியவை நடைபெறாது. மாறாக வெள்ளையனே வெளியேறு குறித்து அனைத்து கட்சியினரும் பேசுவார்கள்.

உறுப்பினர்கள் தேசத்துக்கான தீர்மானத்தை உறுதிமொழியாக வாசிப்பர். அதை லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் வாசிப்பார். இதே போல் ராஜ்யசபாவிலும் சிறப்புக் கூட்டம் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+