மறைந்த சவுதி மன்னர் அப்துல்லா, ஆர்.கே.லட்சுமணனுக்கு நாடாளுமன்றத்தில் இரங்கல்
டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்நாளான நேற்று சவுதி மன்னர் மறைவுக்கும், மறைந்த கார்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணனுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடாளுமன்றத்தில் முதல் நாள் கூட்டம் இரு சபைகளின் கூட்டு கூட்டமாக நடைபெற்றது. இதில் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி உரை நிகழ்த்தினார்.
குடியரசுத்தலைவர் உரை நிகழ்த்தி முடித்ததும் இரு சபைகளும் தனித்தனியாக கூடின. குடியரசு துணைத்தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் ராஜ்யசபா கூடியது.

அப்போது, சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் மறைவுக்கு அவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதையடுத்து, சமீபத்தில் காலமான கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமணன், உத்தராகண்ட் மாநில ராஜ்யசபா உறுப்பினர் மனோரமா டி.சர்மா, முன்னாள் உறுப்பினர்கள் எஸ்.கே.டி.ராமச்சந்திரன், கமலா சின்ஹா, ரமேஷ்வர் தாகுர், ஆனந்த் ராம் ஜெய்ஸ்வால், சரோஜினி மஹிஷி உள்ளிட்டோருக்கும் உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபாவில் அஞ்சலி
லோக்சபா கூடியதும், மேற்கு வங்காள மாநிலம் பங்கோன் தொகுதியில் இருந்து புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மம்தா தாகூர், உறுப்பினராக பதவி ஏற்றார்.
பின்னர், இந்த மாத தொடக்கத்தில் அசாமில் போடோ தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 81 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் பேசினார். முன்னாள் எம்.பி.க்கள் ஜி.வெங்கடசாமி, மேஜர் ரஞ்சித் சிங், டாக்டர் சரோஜினி மகிஷி, டி.ராமாநாயுடு ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி முடிந்ததும் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications