பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்துவது கோழைத்தனமானது: மனோகர் பாரிக்கர் கண்டனம்
பாகிஸ்தான் படைகள் எல்லை பகுதியில் அத்துமீறி தாக்குதல் நடத்துவது கோழைத்தனமானது என மனோகர் பாரிக்கர் கண்டனம்
டெல்லி: சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்துவது கோழைத்தனமானது என பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இந்தியா -பாகிஸ்தான் சர்வேதச எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறு தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

அண்மையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், ஹரியானா மாநிலம் அந்தாஹேதி கிராமத்தைச் சேர்ந்த மன்தீப் சிங் என்ற ராணுவ வீரர் கழுத்தறுத்து கொல்லப்பட்டார். இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மஞ்சில் பகுதியில் ஊடுறுவிய பாகிஸ்தான் படையினர், இந்திய வீரர் ஒருவரை பாகிஸ்தான் ராணுவம் தலையை துண்டித்தும், உடலை சிதைத்தும் கொன்றது, மேலும் இரண்டு வீரர்களையும் பாகிஸ்தான் ராணுவத்தினர் கொன்றனர். இந்த சம்பவத்திற்கு பதிலடி மிகக்கடுமையாக இருக்கும் என இந்திய ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்திய எல்லைக்குள் ஊடுருவி வீரர்களை கொடூரமாக கொன்றுவிட்டு தப்பியோடிய பாகிஸ்தான் ரணுவத்தின் இந்த செயல் கோழைத்தனமானது எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே இந்திய ராணுவ வீரரின் உடல் சிதைக்கப்பட்டதாக ஊடகங்களில் வந்த செய்திக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
முன்னதாக செப்டம்பர் மாதம் 29-ம் தேதி இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி நடத்திவரும் தாக்குதலில் இதுவரையில் 14 பாதுகாப்பு படை வீரர்கள் உள்பட 26 பேர் உயிரிழந்து உள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications