2 பக்கமும் இடி.. குஜராத்தில் பாஜகவுக்கு மிகப்பெரிய தலைவலி.. மிரட்டும் ராஜ்புத் சமூகத்தினர்!
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், பாஜக வேட்பாளருக்கு எதிராக ராஜபுத்திர சமூக மக்கள் பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருவது பாஜக தலைமைக்கு தலைவலியாக மாறியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜோட் தொகுதி பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவை மாற்ற வேண்டும் என்ற ராஜ்புத் சமூக மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். பாஜக வேட்பாளர் புருஷோத்தம் ரூபாலாவை கண்டித்து ராஜ்புத் சமூகத்தினர் பிரமாண்ட பேரணியை நடத்தி வருகின்றனர். மேலும், ராஜபுத்திர சமூகத்தை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் ரூபாலா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜ்கோட் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

குஜராத்: மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 7ஆம் தேதி ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில், பாஜக வேட்பாளர் பர்ஷோத்தம் ரூபாலாவுக்கு கடுமையான எதிர்ப்பலை கிளம்பியுள்ளது.
மத்திய அமைச்சர் ரூபாலா சர்ச்சை பேச்சு: குஜராத் மாநிலம் ராஜோட் தொகுதி பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா களமிறங்கியுள்ளார். இந்நிலையில், ராஜ்புத் சமூக மக்கள் பிரிட்டிஷாருக்கு பெண் கொடுக்கும் அளவுக்கு ஆங்கிலேயர்களிடம் நெருக்கமாக இருந்தனர் என பர்ஷோத்தம் ரூபாலா சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.
மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலாவின் இந்தப் பேச்சுக்கு குஜராத், ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ராஜ்புத் சமூக மக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்ட பின்னரும், அதனை ஏற்க மறுத்துள்ள ராஜபுத்திர சமூக மக்கள் ராஜ்கோட் தொகுதி பாஜக வேட்பாள மாற்ற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பாஜக தலைமைக்கு தலைவலி: இதனால் பாஜக தலைமைக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளரான பர்ஷோத்தம் ரூபாலாவை மாற்றினால், சுமார் 10 தொகுதிகளில் பெரும்பான்மையாக வசிக்கும் பட்டிதார் சமுகத்தவரிடையே அதிருப்தியை ஏற்படுத்தும் என்பதால், வேட்பாளரை மாற்றாமல் அமைதி காத்து வருகிறது பாஜக தலைமை.
இன்று பாஜக மாநில தலைவரை முற்றுகையிட்டு ராஜபுத்திர சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேட்பாளரை மாற்றினால் பட்டிதார் சமூக மக்களின் ஆதரவை இழக்க நேரிடும். இல்லை என்றால் ராஜபுத்திர சமூக மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாது. இரண்டு பக்கமும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது பாஜக.
ஆபத்து: ஏற்கனவே குஜராத் மாநிலத்தில் சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பு காரணமாக 2 வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகினர். இதையடுத்து அவர்களுக்கு பதிலாக வேறு வேட்பாளர்களை அறிவித்தது பாஜக தலைமை. இந்நிலையில், குஜராத் மாநில பாஜகவில் மீண்டும் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜகவின் முக்கிய தலைவர்கள் தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாஜக வேட்பாளர்களை மாற்ற வேண்டும் என்று உள்ளூர் தலைவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் குஜராத்தில் பாஜகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. இந்த முறையும் அனைத்து இடங்களையும் பாஜக கைப்பற்றும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ராஜபுத்திர சமூகத்தினரின் போராட்டங்களால் பாஜகவின் வெற்றிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications