ராஜ்குமார் மனைவி பர்வதம்மா மரணம் எதிரொலி.. பெங்களூரில் பள்ளிகள் - தியேட்டர்கள் மூடல்
பெங்களூரு: பர்வதம்மா ராஜ்குமார் மறைவைத் தொடர்ந்து பெங்களூரில் தியேட்டர்கள் அனைத்தும் இன்று மூடப்பட்டுள்ளன. அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சதாசிவம் நகர் பகுதியில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா இன்று காலை மரணமடைந்தார். அவரது உடல் சதாசிவம் நகரில் உள்ள மகன் ராகவேந்திரா ராஜ்குமாரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பர்வதம்மாவின் உடல் காண்டீரவா ஸ்டேடியத்தில் கணவர் ராஜ்குமார் நினைவிடத்திற்கு அருகிலேயே இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.

பர்வதம்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெங்களூரில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல மைசூரிலும் தியேட்டர்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா முழுவதும் இன்று திரைப்படத் தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பர்வதம்மாவின் உடல் வைக்கப்பட்டுள்ள சதாசிவம் நகர் பகுதியில் உள்ள பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பிற பகுதிகளைப் பொறுத்தவரை, பாதுகாப்பு இருப்பதாக உணர்ந்தால் பிள்ளைகளுக்கு பள்ளிகளுக்கு அனுப்புமாறு பெற்றோர்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
தள்ளி போகிறதா பள்ளிகள் திறப்பு.. அதிகாரிகளுடன் அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை -
மாணவர்களுக்கு குட் நியூஸ்! ஜூன் 4ல் புத்தகம், சீருடை வழங்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு! -
இந்திய டெக் ஊழியர்களை கதறவிட்ட Meta.. 3 பிரிவில் கண்ணை மூடிக்கொண்டு பணிநீக்கம்.. எங்குபோய் முடியுமோ -
சிறைக்கு தள்ளப்படும் Byjus ரவீந்திரன்.. பெங்களூரை கலக்கிய Byju's நிறுவனருக்கு கெட்ட காலம்! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications