சென்னை-குண்டூர் ரயிலில் திடீர் தீ: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
நெல்லூர்: சென்னை- குண்டூர் பயணிகள் ரயிலின் பெட்டி ஒன்று ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் தீப்பிடித்து எரிந்தது. பயணிகள் உடனே கீழே இறங்கியதால் யாரும் காயம் அடையவில்லை.
சென்னையில் இருந்து குண்டூர் செல்லும் பயணிகள் ரயில் திங்கட்கிழமை மாலை 5.52 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது. ரயில் நேற்று மாலை 7.20 மணி அளவில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் எண் ஒன்றை அடைந்தது. அப்போது ரயிலின் இரண்டாவது பெட்டி திடீர் என தீப்பிடித்து எரிந்தது.

மின் கசிவால் அந்த பெட்டியில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. பெட்டி தீப்பிடித்ததை பார்த்த பயணிகள் உடனே அதில் இருந்து கீழே இறங்கிவிட்டனர். இதனால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். உடனே அதிகாரிகள் ஓடிவந்து தீப்பிடித்த பெட்டியை ரயிலில் இருந்து துண்டித்துவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் நல்லவேளையாக பயணிகள் யாரும் காயம் அடையவில்லை என்று நெல்லூர் ரயில்வே போலீஸ் அதிகாரி ரமேஷ் பாபு தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications