பதன்கோட் தாக்குதலுக்கு உடந்தை? 'சந்தேக' எஸ்.பி.க்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு!
பதன்கோட்: பதன்கோட் பயங்கரவாத தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தாரா என சந்தேகிக்கப்படும் குருதாஸ்பூர் போலீஸ் எஸ்.பில். சல்வீந்தர் சிங்கிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் பதன்கோட் விமான படை தளம் மீது பாகிஸ்தானில் இருந்து எல்லை தாண்டி ஊடுருவிய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் வீரமரணம் அடைந்தனர்.

பதன்கோட் மீதான தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகள் தம்மை கடத்தி தமது ஜீப்பையும் பறித்துச் சென்றதாக தாக்குதல் நடத்தப்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக போலீஸ் எஸ்.பி சல்வீந்தர்சிங் புகார் தெரிவித்திருந்தார். அப்போது முதலே அவர் மீது சந்தேகப் பார்வை விழுந்தது.
எல்லை தாண்டி தீவிரவாதிகள் ஊடுருவியதற்கு சல்வீந்தர்சிங் உதவியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைகக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பதன்கோட் தாக்குதலுக்கு உதவிய கருப்பு ஆடுகள் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே சல்வீந்தர்சிங்கிடமும் புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். இருப்பினும் சல்வீந்தர்சிங் மீதான சந்தேகம் நீடிப்பதால் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தவும் அந்த அதிகாரிகள் முடிவெடுத்தனர்.
இதற்காக தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் நீதிமன்றத்திடம் முறையான அனுமதியை பெற உள்ளதாக கூறப்படுகிறது.
-
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
"பட்டாம்பூச்சி எஃபெக்ட்.." ஈரானில் வீசப்படும் குண்டால்.. மிக பெரிய சிக்கலில் தமிழக விவசாயிகள் -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ஈரான் "அந்த" இடத்தில் அடித்தால் உலகத்திற்கே வலிக்கும்.. இன்டர்நெட் மொத்தமாக முடங்கும் ஆபத்து -
பவரை காட்டிய இந்தியா! ஹார்முஸ் நீரிணையை கடந்து வரும் மேலும் 2 எண்ணெய் கப்பல்கள்! -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
தொங்கு சந்தையான பங்கு சந்தை.. 1200000000000 ரூபாய் பாழாப் போச்சு! மண்ணை அள்ளிப் போட்ட ஈரான் போர்! -
ஆடிப்போன அமெரிக்கா! சத்தமின்றி பாகிஸ்தான் செய்த காரியம்.. ஈரான் போருக்கு நடுவே இது வேறயா -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து












Click it and Unblock the Notifications