Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பவன் கல்யாண் அசத்திட்டாரே.. முக்கிய துறைகளை தட்டி தூக்கி கலக்கல்.. அமைச்சரவையில் என்ன பொறுப்பு?

Subscribe to Oneindia Tamil

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையின் இலாக்கா அறிவிக்கப்பட்டு உள்ளது. பவன் கல்யாண் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், அமைச்சரவையில் 3வது இடத்தில் உள்ளார்.

ஆந்திராவில் "அதிரடி" அரசியல் செய்து வந்த பவன் கல்யாண்.. தற்போது அங்கே அமைச்சராகி உள்ளார். நான் அரசியலுக்கு வந்தது தவறு.. சினிமாவில் இருந்திருக்கலாம் என்று ஒரு காலத்தில் புலம்பியவர் இவரின் அண்ணன்.. கலைக்கப்பட்ட பிரஜா ராஜ்ஜிய கட்சி தலைவர் சிரஞ்சீவி. நான் அரசியலுக்கு வந்திருக்கலாம் .. ஆனா வரலை என்று வருவதற்கு முன்பே சுதாரித்து விலகியவர் ரஜினி.

pawan kalyan lok sabha election 2024 2024

இவர்களை எல்லாம் பார்த்து பாடம் படிக்காமல்.. அரசியலில் தலைகீழாக குதித்த.. பவன் கல்யான் ஒருவழியாக அடித்து பிடித்து மேலே வந்து 10 வருடத்தில் அமைச்சரும் ஆகிவிட்டார்.

கூட்டணி: தனியாக நிற்காமல் முறையான கூட்டணி அமைத்து.. அதன் மூலம் பவன் கல்யாண் அங்கே துணை முதல்வராக உயர்ந்து உள்ளார். ஆந்திரா மாநிலத்தில் 175 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் அங்கே தெலுங்கு தேசம் வெற்றிபெற்றுள்ளது. ஆந்திராவில் சட்டசபை தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக ஜெகன் 175 இடங்களிலும் வேட்பாளர்களை களமிறக்கினார்.

சந்திர பாபுவின் தெலுங்கு தேசம் - பாஜக - பவனின் ஜன சேனா கூட்டணியில் ஜன சேனா 21 இடங்களில் நின்றது. காங்கிரஸ் தனியாக சிபிஐ - சிபிஎம் உடன் கூட்டணி வைத்துள்ளது. 144 இடங்களில் போட்டியிட்ட தெலுங்கு தேசம் 135 இடங்களில் வென்றுள்ளது. பவனின் ஜன சேனா கூட்டணியில் ஜன சேனா 21 இடங்களில் நின்ற நிலையில் அனைத்து இடங்களிலும் வென்றது.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு நேற்று முதல்வராக பதவி ஏற்றார். பவன் கல்யாண் துணை முதல்வர் மற்றும் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.

தொடர் தோல்வி - அமைச்சர்: 2014 மார்ச்சில் கட்சி தொடங்கிய பவன் இதற்கு முன் ஒரு தேர்தலில் கூட வென்றது இல்லை. ஒரு தேர்தல் கூட இவருக்கு வெற்றிகரமான தேர்தல் இல்லை. பாஜக கூட்டணி, பின்னர், கம்யூனிஸ்ட் கூட்டணி , பின்னர் தனித்து போட்டி, அதன்பின் மீண்டும் பாஜக கூட்டணி என்று இவர் போட்ட எந்த கூட்டணியும் வென்றதே இல்லை.

இப்படி தொடர் தோல்விகளை சந்தித்த பவன்.. இந்த சட்டசபை தேர்தலில் 21க்கு 21 இடங்களை பெற்று அசத்தி உள்ளார். சட்டசபை தேர்த அதிகபட்சம் போட்டியிட்ட 21 இடங்களில் மொத்தமாக ஸ்வீப் செய்துள்ளார்.

அமைச்சரவை பொறுப்பு: இந்த நிலையில்தான் முக்கியமான துறைகளை அவர் அமைச்சரவையில் பெற்றுள்ளார். சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் பவன் 2ம் இடம் பிடித்துள்ளார். பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக நீர் வழங்கல்; சுற்றுச்சூழல், காடு, அறிவியல் & தொழில்நுட்பம் ஆகிய துறைகளை மொத்தமாக பவன் கல்யாண் பெற்றுள்ளார்.

இன்றுதான் ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையின் இலாக்கா அறிவிக்கப்பட்டு உள்ளது. பவன் கல்யாண் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், அமைச்சரவையில் 3வது இடத்தில் உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+