அரசியலில் பவன் கல்யாண்தான் எனது முக்கிய எதிரி: சிரஞ்சீவி ஆவேசம்
ஹைதராபாத்: அரசியல் வாழ்க்கையில் பவன்கல்யாண்தான் என் முக்கிய எதிரி என்று அவரது அண்ணனும், மத்திய அமைச்சருமான சிரஞ்சீவி கூறியுள்ளார்.
சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாண் சமீபத்தில் ‘ஜனசேனா' என்ற புதிய கட்சியை தொடங்கினார். கட்சியை அறிமுகப்படுத்தி பேசிய அவர், ‘‘தெலுங்கு மக்களை பிரித்த காங்கிரசை அடியோடு அழிப்பேன்'' என்றார்.
பவன்கல்யாண் புதிய கட்சி குறித்து அண்ணன் சிரஞ்சீவி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

அண்ணனாக ஆசி
ஜனநாயக நாடான இந்தியாவில் அரசியல் கட்சியை தொடங்க அனைவருக்கும் உரிமை உண்டு. அந்த வகையில் பவன்கல்யாண் ‘ஜனசேனா' என்ற கட்சியை தொடங்கி உள்ளார். ஒரு அண்ணன் என்ற முறையில் எனது ஆசி அவருக்கு எப்போதும் உண்டு.
என் முக்கிய எதிரி
அதே நேரத்தில் காங்கிரசை அழிப்பேன் என்று அவர் கூறுவதை காங்கிரஸ் காரன் என்ற முறையில் எதிர்க்கிறேன். காங்கிரசை எதிர்க்கும் அவர் எனக்கு முக்கிய எதிரிதான். அவர் மட்டும் அல்ல யார் காங்கிரசை எதிர்த்தாலும் அவர்கள் எனது எதிரிதான்.
பாதயாத்திரை
ஆந்திரா முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் பாதயாத்திரை செல்கிறேன். அப்போது காங்கிரஸ் மீது சுமத்தப்படும் வீண்பழியை துடைக்கும் வகையில் பிரசாரம் செய்வேன்.
காங்கிரசை அழிக்க முடியாது
காங்கிரசை அழிக்க முடியாது என்பது அனைவருக்கும் பின்னர் தெரியவரும் என்று சிரஞ்சீவி கூறினார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications