கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஸ்டார் வேட்பாளர் 'ரியல்' பவர் ஸ்டார்
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஸ்டார் வேட்பாளர்களில் ஜன சேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தான் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஸ்டார் வேட்பாளர்கள் யார் யார் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளவர் ரியல் பவர்ஸ்டார் பவன் கல்யாண்.

பவன் கல்யாண்
அண்மையில் ஜன சேனா கட்சியைத் துவங்கிய தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தான் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஸ்டார் வேட்பாளர். அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ரம்யா
கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நடிகை ரம்யா கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஸ்டார் வேட்பாளர்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

விஷ்வாஸ்
அமேதி தொகுதியில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரான கவிஞர் குமார் விஷ்வாஸுக்கு கூகுள் பட்டியலில் 3வது இடம் கிடைத்துள்ளது.

ராக்கி
மும்பை தொகுதியில் பச்சை மிளகாய் சின்னத்தில் போட்டியிடும் கவர்ச்சி நடிகை ராக்கி சாவ்ந்தின் பெயரும் இந்த பட்டியலில் உள்ளது.

சிரஞ்சீவி
கூகுள் பட்டியலில் பவனின் அண்ணன் சிரஞ்சீவி, நடிகைகள் ஹேமமாலினி, நக்மா, நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா, பெங்காளி நடிகர் தேவ், போஜ்புரி நடிகர் மனோஜ் திவாரி, நடிகை ஜெயபிரதா ஆகியோரின் பெயர்களும் உள்ளன.












Click it and Unblock the Notifications