போர்ப்ஸின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா... பணமதிப்பிழப்பின் பயனாளி!
Recommended Video

டெல்லி : பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். வயதான கோடீஸ்வரராக 92 வயது சம்பிரதா சிங் இடம்பிடித்துள்ளார்.
இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்கள் அதாவது 40 வயதுக்கு கீழ் உள்ள ஒரே இந்திய கோடீஸ்வரரர் என்ற சிறப்புடன் போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா. 39 வயது ஷர்மா பட்டியலில் 1,394வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 1.7 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் சேகர் ஷர்மா 2011ல் பேடிஎம் மொபைல் வேலெட்டை கண்டுபிடித்தார். பேடிஎம் மால், ஈகாமெர்ஸ் வர்த்தகம், பேடிஎம் பேமெண்ட் பேங்குகள் உள்ளிட்ட டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனைகளை ஷர்மா சந்தையில் அறிமுகம் செய்தார்.

பணமதிப்பிழப்பால் பலன் பெற்ற பேடிஎம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலனடைந்த மிகப்பெரிய பயனாளி என்றால் அது பேடிஎம் தான். ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்ட போது மளிகைக்கடை, காய்கறிக் கடை, ஆட்டோரிக்ஷா என்று பலர் மத்தியில் பேடிஎம் பயன்பாடு அதிகரித்தது.

பேடிஎம் பயனாளர்கள்
பேடிஎம் தற்போது 250 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனாளர்களையும், தினசரி 7 மில்லியன் பரிவர்த்தனைகளையும் செய்கிறது. விஜய் சேகர் ஷர்மா பேடிஎம்மின் 16 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு 9.4 பில்லியன் டாலர் என்று போர்ப்ஸ் கூறுகிறது.

உலகம் முழுவதும் 63 கோடீஸ்வர்கள்
போர்ப்ஸின் உலக பணக்காரர்கள் பட்டியலில் 2,208 பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 63 பேர் மட்டுமே 40 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், அவர்களிலும் 34 பேர் சுய தொழில் புரியும் தொழில்முனைவோர்கள். உலகம் முழுவதும் உள்ள 63 கோடீஸ்வரர்களின் மொத்த சொத்து மதிப்பு 265 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் கோடீஸ்வரர்களின் மதிப்பு 208 பில்லியன் டாலராக இருந்தது.

வயதான கோடீஸ்வரர் சம்ப்ரதா சிங்
இதே போன்று அல்கெம் லேபாரடரிஸின் தலைவர் 92 வயது சம்ப்ரதா சிங் வயதான இந்திய கோடீஸ்வரராக பட்டியலில் இடம்பெற்றுள்ளார். சம்ப்ரதா போர்ப்ஸ் பட்டியலில் 1,867வதாக இடம்பெற்றுள்ளார். சம்ப்ரதா சிங் 45 ஆண்டுகளுக்கு முன்னர் அல்கெம் லேபாரடிரீஸை தொடங்கினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications