அமெரிக்க பெண் பலாத்கார வழக்கு: 'பீப்ளி லைவ்' பட இயக்குநருக்கு 7 ஆண்டு சிறை
டெல்லி: அமெரிக்க ஆய்வுத்துறை பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 'பீப்லி லைவ்' பட இணை-இயக்குனர் மஹ்மூத் பாரூக்கிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2010-ம் ஆண்டில் இந்தி நடிகர் அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த இந்திப் படம் பீப்லி லைவ். விவசாயிகளின் தற்கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், இணை இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியராக பணியாற்றியவர் மஹ்மூத்.

அமெரிக்காவில் இருந்து 35 வயதான பெண் ஒருவர் தனது உயர்கல்வி சம்பந்தமான ஆராய்ச்சி விஷயமாக இந்தியா வந்திருக்கிறார். டெல்லியில் ஆராய்ச்சியின் போது இயக்குநர் மஹ்மூத் உதவி செய்ய, பின்பு குடும்ப நண்பர்களாக இருவரும் பழகி வந்துள்ளனர்.
இதனிடையே ஒருநாள் அப்பெண்ணை விருந்துக்கு அழைத்த பரூக்கி கடுமையான குடிபோதையில் அமெரிக்க பெண்ணை கட்டாயப்படுத்தி பலவந்தமாக பலாத்காரம் செய்தததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதில், 2015ம் ஆண்டு மஹ்மூத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பின்னர் மஹ்மூத் பாரூக்கியை கைது செய்தனர். வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த ஜூலை 30-ம் தேதி பாரூக்கி குற்றவாளி என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், மஹ்மூத் பாரூக்கிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அபாரதம் செலுத்த தவறினால், சிறை தண்டனை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்படும் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications