கட்சி தாவுவதில் வல்லவர்.. அருணாச்சல பிரதேச முதல்வராக 3வது முறை பதவியேற்றார் பெமா காண்டு! யார் இவர்?
இட்டாநகர்: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அருணாச்சல பிரேதசத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அம்மாநில முதல்வராக மீண்டும் 3வது முறையாக பாஜகவின் பெமா காண்டு இன்று பதவியேற்றார். முதல்வரான பெமா காண்டு கட்சி தாவுவதில் வல்லவர். இவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அருணாச்சல பிரதேசம். இந்த மாநிலம் நம் நாட்டுக்கு சொந்தமானது. ஆனால் சீனா சட்டவிரோதமாக உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் அருணாச்சல பிரதேசம் என்பது அவ்வப்போது தலைப்பு செய்திகளில் இடம்பெறும்.

இந்த மாநிலத்தில் பாஜகவின் ஆட்சி நடந்தது. முதல்வராக பெமா காண்டு பதவி வகித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து அருணாச்சல பிரதேச மாநிலத்துக்கு சட்டசபை தேர்தலும் நடந்தது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி இந்த மாநிலத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடந்தன.
அருணாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 31 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அந்த வகையில் போட்டியின்றி 10 தொகுதிகளில் பாஜகவின் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் முதல்வர் பெமா காண்டுவும் ஒருவர்.
இதனால் மீதமுள்ள 50 தொகுதிகளில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்தது. ஜுன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக 36 தொகுதிகளில் வெற்றி பெற்றது. என்பிஇபி கட்சி 5 இங்களிலும், என்சிபி கட்சி 3 இடங்களிலும், பிபிஏ கட்சி 2 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சைகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றது. ஏற்கனவே 10 தொகுதிகளில் போட்டியின்றி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்ததால் பாஜக எம்எல்ஏக்களின் பலம் என்பது 46 ஆக அதிகரித்தது.
இதையடுத்து நேற்று பாஜகவின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மேலிட பொறுப்பாளர்களாக ரவிசங்கர் பிரசாத் மற்றும் தருண் சுக் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் போட்டியின்றி ஒரு மனதாக பெமா காண்டு மீண்டும் பாஜகவின் எம்எல்ஏக்களின் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம் அவர் மீண்டும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து பெமா காண்டு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
பெமா காண்டு கடந்த 2016 முதல் தொடர்ந்து முதல்வராக உள்ளார். ஏற்கனவே 2 முறை முதல்வராக அவர் பொறுப்பு வகித்துள்ள நிலையில் இன்று 3வது முறையாக அவர் பதவியேற்றார். ஆளுநர் கேடி பர்நாயக் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழா இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. பெமா காண்டுடன் துணை முதல்வர், அமைச்சர்களும் பதவியேற்றனர். அவரது பதவியேற்பு விழாவில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜேபி நட்டா, பாஜக மூத்த தலைவர்களான ரவிசங்கர் பிரசாத் உள்பட பலர் பங்கேற்றனர்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்க உள்ள பெமா காண்டு அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை டோர்ஜி காண்டு அருணாச்சல பிரதேசத்தில் முதல்வராக இருந்தவர். 2011ல் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் துரதிர்ஷ்டவசமாக காலமானார். அதன்பிறகு பெமா காண்டு அருணாச்சல பிரதேச அரசியலில் வளர தொடங்கினார். காங்கிரஸ் கட்சி, பிபிஏ கட்சிகளில் முதலில் செயல்பட்டார். அதன்பிறகு தான் பாஜகவில் இணைந்தார்.
அதாவது பெமா காண்டு முதல் முறையாக கடந்த 2016ல் அருணாச்சல பிரதேச முதல்வரானார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். அதன்பிறகு அவர் அருணாச்சல பிரதேச மக்கள் கட்சி எனும் பிபிஏ கட்சியில் இணைந்து சேர்ந்தார். அதன்பிறகு பாஜகவுக்கு ஷிப்ட் ஆனார். 2019 சட்டசபை தேர்தலில் பாஜக வென்ற நிலையில் மீண்டும் பெமா காண்டு முதல்வரானார். தற்போது 2024 சட்டசபை தேர்தலில் வென்று 3வது முறையாக அவர் இன்று முதல்வராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications