ஜல்லிக்கட்டில் மிருகவதை.. புதிய ஆதாரங்கள் திரட்டுகிறோம்.. பூர்வா ஜோஷிபுரா
ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம் என்று பீட்டா அமைப்பின் இந்தியத்தலைவர் பூர்வா ஜோஷிபுரா கூறியுள்ளார்.
டெல்லி: இந்தாண்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக அளவு மிருகவதை நடந்துள்ளதாகவும் அது குறித்த புதிய ஆதாரங்களை திரட்டி வருவதாகம் பீட்டா அமைப்பு இந்திய தலைவர் பூர்வா ஜோசிபுரா கூறியுள்ளார்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு எப்படியாவது ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தியே தீர வேண்டும் என சென்னை மெரினா உட்பட தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் புரட்சி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் வெற்றியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் தமிழக சட்டசபையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச்சட்டம் அரசிதழிலும் வெளிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு உட்பட தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதை பொறுத்து கொள்ள முடியாத பீட்டா அமைப்பினர் மீண்டும் ஜல்லிக்கட்டு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுதொடர்பாக அந்த அமைப்பின் இந்திய தலைவர் பூர்வா ஜோஷிபுரா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தற்போது நடந்த ஜல்லிக்கட்டில் அதிகளவு மிருகவதை நடந்துள்ளது. அது குறித்த ஆதாரங்களை திரட்டி வருகிறோம் விரைவில் உச்சநீதிமன்றத்தில் வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications