பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைப்பு: டீசல் விலை 28 காசுகள் உயர்வு !
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்துள்ளன. இந்த புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை நிர்ணயம் செய்வர். ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15 ஆம் தேதிகளில் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகளை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 59.63 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.44.96, கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.64.64 க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.48.33 க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன. மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.65.73 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.51.52 க்கும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.59.10 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.45.62 காசுகளாகவும் இருக்கும்.
-
ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்கள் மட்டும் பாதுகாப்பாக கடப்பது எப்படி? வெளியான சீக்ரெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications