பெட்ரோல், டீசல் விலை இன்றைக்கு எவ்வளவு?
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 23 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 9 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வந்தனர்.

இதனிடையே பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றியமைப்பது குறித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டன. அதன்படி நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பெட்ரோல் விலை 23 காசுகளும், டீசல் லி்ட்டருக்கு 9 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.66.70க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.56.73க்கும் விற்பனை செய்யப்படும். இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications