பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகளும் அதேசமயம் டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.26 என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதிய விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15 ஆம் தேதிகளில் இந்த விலை மாற்றம் செய்யப்படுகிறது.

அந்த வகையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.26 காசுகளும் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த புதிய விலை மாற்றங்கள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
இந்த விலை உயர்வின் மூலம் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.65.65-க்கும், டீசல் ரூ.55.19-க்கும் விற்பனை செய்யப்படும். கடைசியாக ஜூன் 1-ம் தேதி விலை உயர்த்தப்பட்டபோது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58-ம் டீசல் ரூ.2.26ம் உயர்த்தப்பட்டிருந்தது.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, 15 நாட்களுக்கு ஒரு முறை எரிபொருட்கள் விலையில், எண்ணெய் நிறுவனங்கள் திருத்தம் செய்துவருகின்றன. இதன்படி, கடந்த ஜூன் 1ம் தேதியன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு, ரூ.2.58 வரையும், டீசல் விலை ரூ.2.26 வரையும் உயர்த்தப்பட்டிருந்தது.
-
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications