பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.28 குறைந்தது- நள்ளிரவு முதல் அமல்!
டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.28 குறைந்து நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
சர்வதேச சந்தையில் முன் எப்போதும் இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல் விலையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது. அன்று நள்ளிரவு முதல் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 68 பைசா குறைந்து ரூ.70.87 ஆனது.

இந்த நிலையில், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 88 டாலருக்கு விற்பனை ஆகிறது. இது கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த விலை ஆகும்.
இதன் காரணமாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை மீண்டும் குறைத்துள்ளன.
அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ1.28 நேற்று நள்ளிரவு முதல் குறைந்தது. டெல்லியில் லிட்டருக்கு ரூ.1.21-ம், கொல்கத்தாவில் ரூ.1.25-ம், மும்பையில் ரூ.1.27-ம் விலை குறைந்தது.












Click it and Unblock the Notifications