டோணி மகள் ஜிவா முகத்தை முழுவதுமாக பார்த்ததில்லையா.. இங்கே பாருங்க!

Subscribe to Oneindia Tamil

ராஞ்சி: கிரிக்கெட் வீரர் டோணி பிஞ்சு மகள் ஜிவாவின் முக அழகை முழுமையாக பார்த்து ரசித்ததில்லையா, ரசிகர்களுக்கு அந்த பாக்கியம் இன்று கிடைத்துள்ளது.

டோணி இந்திய அணிக்காக உலக கோப்பையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, இந்தியாவில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சாக்ஷி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.

PHOTO: MS Dhoni with his little daughter Ziva at Ranchi airport

இந்திய அணி அரையிறுதி வரை முன்னேறிய நிலையில், பைனலுக்கு செல்ல முடியாமல் தாயகம் திரும்பியது. அதன்பிறகுதான், டோணி தனது மகளை முதல் முதலில் நேரில் பார்த்தார்.

தங்கள் செல்ல மகளுக்கு ஜிவா என்று செல்ல பெயர் சூட்டியுள்ளனர் டோணி-சாக்ஷி தம்பதியினர். ஐபிஎல் சீசன் 8 நாளை தொடங்க உள்ள நிலையில் டோணி மீண்டும் பிசியாகிவிடுவார். எனவே தனது மகளுடனே இதுவரை பெரும்பாலான நேரத்தை செலவிட்டு வந்தார் டோணி.

ரெய்னா திருமணத்தில் பங்கேற்க சென்ற டோணி தனது மகளை கங்காருபோல மடியில் வைத்து தூக்கி சென்ற புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. அதேபோல இன்றும் டோணி ராஞ்சி ஏர்போர்ட்டில் மகளை தூக்கியபடி சென்றார். ஆனால் இந்த படத்தில் குழந்தையின் அழகு முகம் முழுமையாக தெரிகிறது.

இந்த போட்டோ ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+