லுங்கி கேர்ள்ஸ்... சமூக வலைத்தளங்களில் வைரல் ஆன போட்டோ... எது உண்மை
திருவனந்தபுரம்: லுங்கி கட்டி ஸ்டைலாக போஸ் கொடுத்துக்கொண்டு இளம் பெண்கள் வரிசையாக நிற்கும் படம் ஒன்று தற்போது, சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த படத்தைப் பற்றி பலரும் பலவிதமான செய்திகளை பதிவிட்டு வரும் நிலையில் உண்மை செய்தி என்ன என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது.
கேரளாவில் உள்ள ஒரு கல்லுாரியில், மாணவியர் ஜீன்ஸ் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதையடுத்து, மாணவியர் லுங்கியுடன் வந்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர் என, அந்த படத்துக்கு விளக்கமும் கொடுக்கப்பட்டது.
A college in Kerala recently banned jeans so these girls lungi-ed it up! Well done ! 🙌🏼👊🏼 pic.twitter.com/sBGuzejLqL
— Archana Vijaya (@archanavijaya) June 6, 2016
அதைத் தொடர்ந்து, சமூகவலைதளத்தில், மக்கள் கொந்தளித்து தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்யத் துவங்கினர். ஆனால், இது உண்மை இல்லை என்று ஒருவர் பதிவு செய்தார்.
லுங்கியுடன் மாணவியர் இருக்கும் படம் உண்மை தான். ஆனால் செய்தி தான் தவறு. தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, ஸ்ரீமந்துடு என்ற படத்தில் லுங்கியுடன் நடித்தார். அதைப்பார்த்து, கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், அவரைப் போலவே, அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவியரும், லுங்கி அணிந்தபடி வெளியிட்டது தான் இந்த படம் என்று அந்த நபர் கூறியுள்ளார். ஆனால், அதுவும் உண்மையில்லை என்று,மற்றொருவர் பதிவு செய்துள்ளார்.
பிரேமம் ஸ்டைல்
Premam @iamNivinPauly style.... pic.twitter.com/9IhOvelncV
— ULTIMATE STAR THALA (@thala_fansclub) January 2, 2016
கேரளாவில் சினிமா ரசிகர்கள் ஒரு நடிகரின் உடை, ஸ்டைல் பிடித்து விட்டால் அதை ட்ரெண்ட் ஆக்கிவிடுவார்கள். அப்படித்தான் பிரேமம் படத்தில் நிவின்பாலி அணிந்து நடித்த வெள்ளை வேஷ்டி, கறுப்பு சட்டையை மாணவிகளும் அணிந்து வந்து ட்ரெண்ட் செய்தனர்.
இந்த லுங்கி கேர்ஸ் படத்தில் இருப்பது யார், இந்த படத்தை எடுத்தது யார், எப்போது, எந்த தருணத்தில் எடுத்தது என்பது தெரியவில்லை. ஒவ்வொருவரும் தங்களுடைய கற்பனையை உலவ விட்டு வைரல் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications