For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதுவும் இந்திய உணவே: எறும்பு சட்னி, தவளைக் கால் 65, பன்றி மூளை. சில்லி பட்டுப்புழு, நாய்கறி குழம்பு!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய உணவு வகைகளில் சைவம், அசைவத்துக்கு அப்பால் சில மிரட்டும் உணவு வகைகளும் பிரபலமானவைதான்.

பொதுவாக இந்திய சைவ உனவு வகைகளில் இட்லி,தோசை, பொங்கல், சப்பாத்தி, பூரியும் அசைவ உணவு வகைகளில் சிக்கன் மட்டனும்தான் முதன்மையானவை.

இவை அல்லாத சில மிரட்டும் உணவு வகைகளையும் பாருங்கள்..

சித்தெறும்பு சட்னி..

சித்தெறும்பு சட்னி..

சத்தீஸ்கர் மாநிலத்தின் சப்ரா மாவட்டத்தில் மிக பிரபலமானது சித்தெறும்பு சட்னி.. சிவப்பு எறும்புகள் என்கிற சித்தெறும்புகளை மொத்தமாக பிடித்து நன்றாக வறுத்து நல்ல காரசாரமான மசாலாக்களை சேர்த்து தயாரிக்கப்படுவதுதான் இந்த சட்னி. வாயில் தொட்டு வைத்தாலே ஷாக் ஆகிவிடுவீர்களாம்.. (எறும்பு கண்ணுக்கு நல்லதுன்னு சிறுவயதில் யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது)

தவளைக் கால் 65

தவளைக் கால் 65

பிரன்ஸ் நாட்டில் மிகவும் பிரபலமான ஆடம்பர உணவுகளில் ஒன்று தவளைக்கால் வறுவல். நம்ம சிக்கிம் மாநிலத்திலும் கூட இந்த தவளைக்கால் வறுவல் பேமஸ்..

பன்றி மூளை வறுவல்

பன்றி மூளை வறுவல்

ஆசிரியாவிலேயே மிகப் பெரிய பன்றி இறைச்சிக் கூட்டம் இருப்பது மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில்தான். அவர்கள் பன்றியின் ஒரு உறுப்பையும் கூட விட்டுவைப்பதில்லை.. நாம ஆடுகளை விட்டு வைக்காதது போல.. அதில் ரொம்ப ஸ்பெஷல் பன்றி மூளை வறுவல்தானாம்.

பன்றி - சிக்கன் மிக்ஸிங்

பன்றி - சிக்கன் மிக்ஸிங்

இதுவும் மேகாலயாவில் பேமஸ்தான். கோழி ரத்தத்துல பன்றியோட குடலை போட்டு சமைக்கும் ஜடோ என்ற இந்த உணவு மேகலாயாவின் ஜெயந்தியா பழங்குடிகளுக்கு பிடித்தமான உனவு.

நாய்க்கறி..

நாய்க்கறி..

நாகாலாந்து மாநிலத்தில் மிக பிரபலமானது நாய்க்கறிதான். நாய்க்கறியை எத்தனை வகையாக சாப்பிட முடியுமோ அத்தனை வகையும் கிடைக்கும்.. நாய்க்கறி கிரேவிதான் சூப்பராம்.

பட்டுப்புழு வறுவல்

பட்டுப்புழு வறுவல்

இது அஸ்ஸாமில் பேமஸ். கோரிசா என்று அழைக்கப்படும் இது பட்டுப்புழுக்களை வறுவலாக்கி சமைப்பது.. சாப்பிடுவதற்கு முன்பு முதலில் எடுத்துக் கொள்கிறார்கள்..

English summary
Indian cuisine is not just about curries and breads. If you travel from one state to another, your palate will be exposed to different flavours and tastes that you may never find in any other country. While non-vegetarian dishes like butter chicken and biryani are easily the most popular ones in India, fish is an essential part of the diet in the coastal regions. Have you ever tried pig's intestines in a meal?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X